அந்தகாரம் படத்தில் வினோத் கிஷன்.. வில்லனா.. ஹீரோவா... ரசிகர்கள் ஆர்வம் !
சென்னை : நடிகர் வினோத் கிஷன் அந்தகாரம் படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
அந்தகாரம் படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியானதை அடுத்து அர்ஜூன் தாஸ் மற்றும் வினோத் கிஷன் குறித்தும் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றனர்.

கைதி படத்தின் மூலம் பிரமலமடைந்த அர்ஜுன் தாஸ் அந்தகாரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திலும் அவரது ஸ்டைலேயே அசத்தியுள்ளார். இதே நேரத்தில் கண் தெரியாதவர் போல் நடித்துள்ளார் வினோத் கிஷன்.
வினோத் கிஷன் தமிழ் சினிமாவில் மிக முக்கிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தியவர் நீண்ட வருடத்திற்கு பிறகு இவர் முழு நீள கதாபாத்திரத்தில் நடித்து ரீ எண்ட்ரி கொடுத்துள்ளது ரசிகர்களை ஆச்சரியபடுத்தியுள்ளது.
வினோத் கிஷன் நந்தா படத்தில் சிறு வயது சூர்யாவாக நடித்து தனது முதல் படத்திலே அனைவரின் கவனத்தை ஈர்த்து இருப்பார். இதனையடுத்து, கிரீடம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருப்பார் இதன்பின் நான் மகான் அல்ல படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் வினோத் கிஷன். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்து சில விருதுகளையும் வாங்கி கொடுத்தது.
இதையடுத்து நிறைய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வினோத் கிஷன் கடைசியாக தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .
நான் மகான் அல்ல படத்திற்கு பின் கவனிக்க வைக்கும் கதாபாத்திரத்தை தேடி வந்த நடிகர் வினோத் கிஷன். அடவி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்தது.
இறுதியாக ஒரு பெரிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து விட்டார் கிஷன் என்றே சொல்லலாம். அந்தகாரம் முன்னோட்டத்தை பார்க்கும் பொழுது பல ஷாட்டுகளில் கவனம் ஈர்த்து உள்ளார் வினோத் கிஷன். ஆனால் இவர் வில்லனா ஹீரோவா என்று தான் ரசிகர்கள் சிந்தித்து வருகின்றனர்.

மேலும் வினோத் கிஷனின் அடையாளமே அவரது கூரிய பார்வையும் அவரது வில்லதனமான பேச்சும் தான். எந்த ஒரு வில்லன் கதாபாத்திரத்திற்கும் எளிதில் பொருந்தக்கூடியது அவரின் முகம். ஆனால், அந்தகாரம் படத்திலோ கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதே ரசிகர்களின் முழு கவனத்தை வினோத் பக்கம் திருப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











