திரைத் துளி
டெல்லி:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட காந்திதாம் நகரில் சமுதாயக் கூடம் ஒன்றை அமைத்து வருகிறார் முன்னாள் ஹிந்தி நடிகரும் தற்போதையபா.ஜ.க. எம்.பி.யுமான வினோத் கன்னா.
150 குடும்பங்கள் வரை குடியிருக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் ஒரு வருடம் வரை இருக்க முடியும். அருகிலேயேபள்ளிகூடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
பஞ்சாபின் குர்தாஸ்பூர் தொகுதி எம்.பி.யான கன்னா, தனது தொகுதி மக்களிடம் இருந்து திரட்டிய நிதியின் மூலம் இவற்றை அமைத்து வருகிறார்.
பூகம்பத்தால் அதிக உயிர்கள் பலியானது புஜ் என்றாலும் காந்திதாம் நகரில் பொருட்சேதம் அதிகம். எனவே இந்நகர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பொதுகழிப்பிட வசதி, மருத்துவ சேவைக்கான ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட கட்டிட பணிகள் விரைவில் முடிந்தவுடன் அதனை அரசு அதிகாரிகள்,பொதுமக்கள், மற்றும் சமூக சேவகர்கள் அடங்கிய குழுவிடம் இக்குடியிருப்பின நிர்வாகம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்த கன்னா தானும் அடிக்கடிஇங்கு வந்து பார்வையிட இருப்பதாக கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.


Click it and Unblock the Notifications











