தெலுங்கில் ரீமேக்காகும் வினோதய சித்தம்… சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் நடிக்கும் உச்ச நடிகர்
ஹைதராபாத் : நடிகர் சாய் தரம் தேஜ் ' Pilla nuvvu leni jervitham ' எனும் படத்தின் மூலம் தெலுங்கு திரைக்கு அறிமுகமானவர்.
2014 ஆம் ஆண்டு ரிலீசான இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த புதுமுக கதாநாயகனாக SIIMA விருதை வென்றவர். இவர் நடிகர் சிரஞ்சீவியின் தங்கை மகன் ஆவார்.
தற்போது இவர் நடிக்கும் வினோதய சித்தம் ரீமேக் படத்தில் இவருடன் நடிகர் பவன் கல்யாண் நடிக்க உள்ளார்.

பைக் ஆக்சிடென்ட்
கடந்த வருடம் நடந்த பைக் விபத்தில் பலத்த காயத்திற்கு உள்ளானவர் சாய் தரம் தேஜ். பல நாட்கள் கோமாவிலிருந்து பிறகு சுய நினைவுக்கு வந்து தொடர் சிகிச்சைக்குப் பிறகு குணம் ஆகியுள்ளார். சிகிச்சை பெற்று குணமாகும் வேலையில் அதிகப்படியான தனது உடல் எடையை குறைத்துள்ளார். பூரண குணமாகிய பிறகு சாய் தரம் தேஜ் தனது ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார். தற்போது சாய் தரம் தேஜ் மிகவும் Fit ஆக காணப்படுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. சாய் தரம் தேஜ் தற்போது தான் நடிக்கும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

வினோதய சித்தம்
2021 ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் வினோதய சித்தம். சமுத்திரக்கனி இயக்கி நடித்த படம். நடிகர் தம்பி ராமையா கதை நாயகனாக நடித்த திரைப்படம். ZEE5 ல் ரிலீஸான இந்த படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பல பத்திரிகைகள் படத்தை மிகவும் வியந்து பாராட்டினார்கள். கார் விபத்தில் இறந்து போகும் ஒருவர் மறுபடியும் அதே வாழ்க்கையில் 90 நாட்கள் வாழ பூமிக்கு வருவது என சொல்லப்படும் இந்த கதையில் இறந்து போனவர் ஆக தம்பி ராமைய்யா நடிக்க, அவர் கோரிக்கையை ஏற்று அவருக்கு அந்த வாய்ப்பை தரும் கடவுளாக சமுத்திரக்கனி நடித்திருப்பார். இதில் தம்பி ராமையாவின் நடிப்பைப் பற்றி பலரும் சிலாகித்துப் பேசி இருந்தனர். தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.

தொடர் படங்கள்
பைக் விபத்தில் இருந்து திரும்பியிருக்கும் சாய் தரன் தேஜ் தொடர் படங்களில் நடிக்க உள்ளார். இயக்குநர் சுகுமார் எழுதிய கதையில் ஒரு படம் நடிக்கிறார். கார்த்திக் தண்டு எனும் இயக்குநர் இதை இயக்குகிறார். இதைத் தொடர்ந்து அவர் நடிக்கும் படம் வினோதய சித்தம் ரீமேக் ஆகும். இதை தமிழில் இயக்கிய சமுத்திரக்கனி இயக்குகிறார். தம்பி ராமையா நடித்த கதாபாத்திரத்தில் சாய் தரன் தேஜ் நடிக்க, சமுத்திரக்கனி வேடத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.

DemiGod
தெலுங்கு சினிமாவில் வெறித்தனமான ரசிகர்களை கொண்டவர் பவன் கல்யாண். ரசிகர்களால் கடவுளாக பார்க்கப்படுபவர். பவன் கல்யாண் தற்போது வினோதய சித்தம் தெலுங்கு ரீமேக்கில் கடவுளாக நடிகை இருக்கிறார். இவர் கடவுளாக நடிக்கும் இரண்டாவது படமாகும். இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு ரிலீஸான கோபாலா கோபாலா படத்தில் கிருஷ்ணராக நடித்திருக்கிறார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது அதே போல இதிலும் கடவுளாக நடிப்பதால் படம் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











