அடிமட்ட அறிவிலிகள்..வேற்று கிரகத்திலிருந்து வந்தாலும் ஒண்ணும் நடக்காது.. TVK விஜய்யை வறுதெடுத்த நடிகை
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய தினமான ஏப்ரல் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிரான பதிவுகள் இணையத்தில் அதிகமாகிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் நடிகை வினோதினி தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சி எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. இதில் விஜய்யின் பிரசாரம் பெருமளவுக்கு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஒரு நாள் விட்டு ஒருநாள் என பிரசாரம் செய்து கொண்டு இருந்தார். இப்படி இருக்கையில் கடைசி சில தினங்களில் மட்டும் அடுத்தடுத்த நாளில் பிரசாரத்தில் கலந்து கொண்டார்.

அதிலும் குறிப்பாக அவரது பிரசார உரையில், வெளிநாட்டில் இருந்து, வெளி மாநிலங்களில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்காக ஓட்டு போட வருகின்றோம் என்று இணையத்தில் பதிவிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்தார். அதேபோல் எல்லா குழந்தைகளும் தங்களுக்கு ஒரு சாக்லேட் வேண்டும் என்றால் எப்படி அடம் பிடித்து வாங்குவீர்களோ, அதேபோல் இந்த விஜய் மாமாவுக்கு ஓட்டு போடச் சொல்லி அடம் பிடியுங்கள் என்று பேசினார். விஜய் பேச்சில் குழந்தைகளை அடம் பிடிக்கச் சொன்ன பேச்சுக்கு பதிலடிகள் நாலாபுறம் இருந்தும் குவிந்து வரும் நிலையில், நடிகை வினோதினி வைத்தியநாதன் தனது ஸ்டைலில் ஒரு பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது, " ரசிகர்கக்குஞ்சுகள் வெளிநாட்டுலேர்ந்து வந்தாலும் வேற்று கிரகத்துலேர்ந்து வந்தாலும் ஒண்ணும் நடக்காது. அவங்க நினைக்கிற மாதிரி இது அறிவிலிச் சமூகமல்ல. எல்லா சமூகத்துலையும் அடிமட்ட அறிவிலிகள் இருப்பாங்க. ஆனா அவங்க விதிவிலக்கா தான் இருப்பாங்க. மூளை மழுங்கடிக்கப்பட்ட எந்த ஒரு கும்பலும் விழித்துக்கொள்ளும்னு சரித்திரம் நமக்குத் திரும்பத் திரும்ப உணர்த்தியிருக்கு. இன்னிக்கு விஜய் மாமா வேணும்னு என்னமோ கிண்டர் ஜாய் வேணும்னு அழுகிற மாதிரி அடம்பிடிக்கும் குழந்தைகள் காலப்போக்குல அறிவு வளர, அது தப்புன்னு புரிஞ்சுப்பாங்க" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதேபோல், பிக்பாஸ் விமர்சகரான இம்தாத் தனது எக்ஸ் பக்கத்தில், " உங்கள் குழந்தைகள் சொல்றதுக்காக விஜய்க்கு ஓட்டு போடறதுக்கு முன்னாடி... விஜயின் குழந்தைகள் எந்த பாதையை தேர்வு செய்திருக்காங்கன்னு நினைச்சு ஒரு நிமிஷம் யோசிங்க. அதனை உங்கள் குழந்தைகளுக்கும் புரியவையுங்கள். ஓட்டு ஒரு உணர்ச்சி இல்லை - ஒரு பொறுப்பு" என்று பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த போஸ்ட் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications