CM விஜய்க்கு இதுக்காகத்தான் ஓட்டு போட்டாங்க.. பாட்டாவே பாடிய நடிகை.. இதை கவனிச்சீங்களா
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று இரண்டு வாரங்கள் ஆகி இருந்தாலும், அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் திரைத்துறையில் இருந்து தொடர்ந்து கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் வரை காட்டமாக விஜய்யை விமர்சித்துக் கொண்டு இருந்தவர்கள், அதன் பின்னர், முதலமைச்சர் விஜய்க்கு எதிரான விமர்சனங்களை கைவிட்டுவிட்டனர். ஆனால் தேர்தல் நேரத்தில் தொடங்கி, இப்போது வரை முதலமைச்சர் விஜய் குறித்து காட்டமான விமர்சனங்களை தனது பாணியில் தெரிவித்து வருபவர்களில் ஒருவர் நடிகை வினோதினி வைத்யநாதன்.
அவர் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் இணைய வாசி ஒருவர், எதற்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதற்காக வாக்குச் செலுத்தினீர்கள் என்று கேட்ட கேள்விக்கு தனது ஸ்டைலில் மிகவும் காட்டமான பதிலை கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டுள்ளார்.

இதுதான் காரணம்: அதாவது, " அண்ணா பாவம்.
அண்ணா ஒரு வாய்ப்புதானே கேக்குறாரு, கொடுப்போம்.
மாற்றம் வேணும்.
அண்ணா நல்லா டான்ஸ் ஆடுவாரு.
அண்ணா பார்க்க நல்லா இருக்காரு.
அண்ணாவுக்கு நான் அக்காவா தங்கையா இல்ல என்னவா வேணும்னாலும் இருப்பேன்
அண்ணா... நீங்க ஒடம்ப பார்த்துக்கோங்கண்ணா.. எங்களுக்காக இவ்ளோ கஷ்டப்படாதீங்க
அண்ணா சினிமால ஆக்ஷன் ஹீரோ மாதிரி செஞ்சத ரியலாவும் செய்வார்
அண்ணா தூயசக்தி
அண்ணா பாவம்ல
அண்ணா முகம் வாடியிருக்கு
மாமாக்கு ஓட்டுபோட சொல்லி பையன் பொண்ணு கேக்குறாங்க
மாமாக்கு ஓட்டுபோட சொல்லி பேரன் பேத்தி கேக்குறாங்க
அண்ணா பாவம்ல... எல்லாரும் அவர சி எம் ஆகவிடாம படுத்துறாங்க" என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து விளாசல்: அதேபோல், மற்றொரு பதிவில், " கடந்த 10 நாளா தொடர்ந்து கொலை, பாலியல் கொடுமைகள் சட்ட ஒழுங்கு சீர்கேடு செய்திகள் வர வர, பல தவெக ஐடிக்கள் ஆக்டிவ்வா இல்ல கவனிச்சீங்களா? எல்லோரும் சொல்லிவெச்ச மாதிரி சைலண்ட் மோட்ல இருக்காங்க" என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஆறு மாதம் டைம் கொடுங்க என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருப்பதையும் விமர்சித்துள்ளார். அதாவது, " அது என்ன ஆறு மாசம் டைம் குடுங்க ஆறு மாசம் டைம் குடுங்கன்னு ஏதோ இண்டர்ன்ஷிப் பிராஜக்ட் மாதிரி சொல்லுறாங்க" என்று விமர்சித்துள்ளார். இவரது பல எக்ஸ் தளப் பதிவுகளுக்கு நெட்டிசன்கள் பலர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications