காதலுக்கு துணைபோகும் செல்போன்... அருண் பாண்டியன் மகளின் அடுத்தப்படம்... இதோ படத்தோட டைட்டில்!
சென்னை : பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் கோலிவுட்டின் புதிய வரவாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தும்பா படத்தின்மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து அன்பிற்கினியாள் படத்தில் நடித்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

நடிகர் அருண் பாண்டியன் மகள்
பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண் பாண்டியன். இவர் ஹீரோவாகவும் கேரக்டர் ரோல்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவரது மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது கோலிவுட்டில் அறிமுகமாகி சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தும்பா என்ற படத்தின்மூலம் இவர் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அருண் பாண்டியனுடன் நடித்த கீர்த்தி
தொடர்ந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ஹெலன் என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் இந்தப் படம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் தன்னுடைய தந்தை அருண் பாண்டியனுடன் இணைந்து கீர்த்தி பாண்டியன் நடித்திருந்தார்.

கொஞ்சம் பேசினால் என்ன படம்
அடுத்ததாக இயக்குநர் ஷாலினி இயக்கத்தில் உருவாகிவரும் கண்ணகி என்ற படத்திலும் கீர்த்தி பாண்டியன் நடித்து வருகிறார். தொடர்ந்து நான் மகான் அல்ல படத்தில் நடித்துள்ள நடிகர் வினோத் கிஷனுடன் இணைந்து கொஞ்சம் பேசினால் என்ன என்ற ரொமாண்டிக் படத்தில் தற்போது கமிட்டாகியுள்ளார் கீர்த்தி.

பர்ஸ்ட் லுக் வெளியானது
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கிரி மர்பி இயக்கி வருகிறார். மேலும் சமீபத்தில் வெளியான முதல் நீ முடிவும் நீ படத்தின் தயாரிப்பாளர் சமீர் பாரத் ராம் தனது சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
Recommended Video

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட பர்ஸ்ட் லுக்
இந்த போஸ்டரை விக்ரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு தற்போது கீர்த்தி பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார். இந்த போஸ்டரில் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் தனித்தனியாக செல்போனில் பேசுவதாக காணப்படுகிறது. தீபன் சக்ரவர்த்தி படத்திற்கு இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











