டைகர் விருது பெற்ற கூழாங்கல்...படம் பற்றி டைரக்டர் வினோத்ராஜ் ஓப்பன் டாக்

சென்னை : புதுமுக இயக்குனரான பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் படம் 50 வது ரோட்டர்டம் திரைப்பட திருவிழா 2021 ல் கவுரவம் மிக்க டைகர் விருதினை பெற்றுள்ளது. டைகர் விருது பெறும் முதல் தமிழ் படம் இது தான்.

 Vinothraj on Koozhangal winning at IFFR

விருது வென்றதை பற்றி வினோத் ராஜ் கூறுகையில், இந்த அங்கீகாரத்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம். திருவிழாவில் நடுவர் மற்றும் பார்வையாளர்கள் மிக ஆர்வமுடன் கூழாங்கல்லை பார்த்திருப்பார்கள் என தெரியும்.

வழக்கமாக பார்வையாளர்களின் கருத்தினை கேட்க படக்குழுவை சேர்ந்த சில உறுப்பினர்கள் மட்டும் அந்த நாட்டிற்கு செல்வார்கள். ஆனால் கொரோனா பேரிடர் காலம் என்பதால் அந்த வாய்ப்பை நாங்கள் இழந்து விட்டோம். இருப்பினும் இந்த சாதனை மகிழ்ச்சி அளிக்கிறது.

எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம் தான் இந்த படத்தை இயக்க என்னை தூண்டியது. அந்த சம்பவம் எனக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கதைக்கு தேவையான வறண்ட நிலப்பரப்பை தேட அதிக நேரம் செலவிட்டேன்.

கடைசியாக மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள அரிட்டாப்பட்டியில் அப்படி ஒரு இடத்தை கண்டுபிடித்தேன். அங்கு மொத்த படத்தையும் 30 நாட்களுக்கும் மேலாக படமாக்கினோம். நாங்கள் படம்பிடித்த 13 கிராமங்களில் இருந்த மலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.நாங்கள் அந்த கிராமங்களை ஆராய்ந்த போது எனது கதையும் கூட வளர்ந்தது.

அங்கிருந்த ஈரமான வானிலை தான் எங்களுக்கு மிகுந்த சவாலாக அமைந்தது. சூரிய ஒளி தான் கதைக்கு மிகவும் முக்கியம். அதனால் தினமும் 10 மணிக்கு பிறகு தான் படப்பிடிப்பை துவக்கி, 3 மணிக்கு முடித்து விடுவோம்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர்களான நயன்தாரா, விக்னேஷ் சிவன் போன்ற பெரிய பெயர்கள் இந்த படத்திற்கு கூடுதல் பலம். இன்னும் பல திரைப்பட விழாக்களில் இப்படத்தை திரையிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இந்த ஆண்டு இறுதியில் தியேட்டர்களிலும் இப்படத்தை திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X