விஐபி 2: தனுஷோடு வில்லி கஜோலே வருகிறாரே, ஹீரோயின் அமலா பால் எங்கய்யா?

By Siva

சென்னை: விஐபி 2 படத்தின் ஹீரோயின் அமலா பாலை விட வில்லி கஜோலுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ?

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் வசனம் எழுதி நடிக்கும் படம் விஐபி 2. ஆமாங்க, ஹிட்டான விஐபி படத்தின் இரண்டாம் பாகம் தான். இந்த படத்தில் தனுஷுக்கு வில்லன் அல்ல வில்லி உள்ளார்.

அந்த வில்லி வேறு யாரும் அல்ல பாலிவுட்டின் முன்னணி நடிகையான கஜோல் தேவ்கன் தான்.

போட்டோஷூட்

போட்டோஷூட்

சவுந்தர்யாவும், தனுஷும் மும்பைக்கு சென்று கஜோலுடன் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். கஜோலும் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பல ஆண்டுகள் கழித்து தமிழில் நடிப்பதாக அறிவித்தார்.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷும், கஜோலும் ஒருவரையொருவர் பார்த்து முறைத்தபடியே லேசாக சிரிப்பது போன்று இருந்தார்கள். படத்தின் ஹீரோயின் அமலா பாலை போஸ்டரிலும், போட்டோஷூட்டிலும் காணவில்லை.

மோஷன் போஸ்டர்

விஐபி 2 படப்பிடிப்பு துவங்கிவிட்டதை அறிவிக்கும் வகையில் தனுஷ் ட்விட்டரில் மோஷன் போஸ்டர் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதிலும் கஜோல் தான் உள்ளாரே தவிர ஹீரோயினை காணோம்.

அமலா பால்

அமலா பால்

அமலா பால், தனுஷை சேர்த்து வைத்து வதந்தி ஒன்று தீயாக பரவி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அதனால் வம்பு எதற்கு என்று நினைத்து அவரை முன்னிலைப்படுத்தவில்லை போன்று.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X