twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரே இடத்தில் 1014 நபர்கள்... ஹேர் கலர் ஷாம்புவில் கின்னஸ் சாதனை படைத்த ஆர்.கே

    |

    சென்னை: கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடிப்பது என்பது சாதாரணமான காரியம் அல்ல.அதில் ஒரு நடிகரும், தொழிலதிபருமான நடிகர் ஆர் கே இடம்பிடித்துள்ளார். ஹேர் டை அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ. இந்த புதிய தயாரிப்பை கண்டுபடித்தது சாட்சாத் ஒரு சினிமா நடிகர் என்றால் நம்ப முடிகிறதா..? ஆம்.. எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ஆர்கே தான் இதனைக் கண்டுபிடித்துள்ளார்.

    வில்லுப்பாட்டுக்காரன், தூண்டில் போன்ற திரைப்படங்களில் துணை நடிகராக இருந்து பின்னர் எல்லாம் அவன் செயல், வைகை எக்ஸ்பிரஸ், அழகர் மலை, புலிவேஷம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். பாலாவின் அவன் இவன், பாயும் புலி, ஜில்லா, மஞ்சள் வெயில் போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

    இவர் நடிகராக இருப்பினும் வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இவருக்கு இருக்கிறது. VIP ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் VIP ஹேர் கலர் ஷாம்பு எனும் நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே தான் கின்னஸ் உலக சாதனைக்கு முயற்சிக்கத் தயாராக இருப்பதாக R.K அறிவித்திருந்தார்.

    சுதந்திர தினத்தில் கின்னஸ் சாதனை

    சுதந்திர தினத்தில் கின்னஸ் சாதனை

    இவரது புதிய கண்டுபிடிப்பான விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை உலக மார்க்கெட்டில் சந்தைப்படுத்துவதற்காக இதன் நம்பகத்தன்மையை உலக அரங்கில் நிரூபிப்பதற்காக மிகப்பெரிய கின்னஸ் சாதனையை இந்த சுதந்திர தினத்தன்று சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள EVP பிலிம் சிட்டியில் நிகழ்த்தியுள்ளார். சரியாக 1014 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி ஒரே சமயத்தில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அவர்களைப் பயன்படுத்தச் செய்து, அதன்மூலம் இதன் தரத்தை உறுதி செய்வது என்பதுதான் இந்த சாதனையின் நோக்கம்.

    1014 பயன்பாட்டாளர்கள்

    1014 பயன்பாட்டாளர்கள்

    இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை வெறும் கையால் தொட்டு பயன்படுத்திவரும் 1014 பயன்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை மேற்பார்வை செய்த ஆறு நடுவர்களில் இரண்டு பேர் லண்டனில் இருந்து வருகை தந்திருந்தனர். மீதி நான்கு நடுவர்களும் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பிரபலங்கள். நடுவர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூரும் கலந்துகொண்டார்.

    கின்னஸ் சாதனை நிகழ்ச்சி

    கின்னஸ் சாதனை நிகழ்ச்சி

    இந்த கின்னஸ் சாதனை நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பயன்பாட்டாளர்களும் இதில் கலந்துகொள்ள தகுதியானவர்கள் தானா என்று நடுவர்கள் குழுவின் நீண்ட சோதனைகளுக்குப் பின்னரே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் நடிகர் ஆர்.கே.விடம் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 1014 பேருக்கும் இந்த கின்னஸ் சான்றிதழ் தனித்தனியாக வழங்கப்படும்.

    கரீஷ்மா கபூர்

    கரீஷ்மா கபூர்

    இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் இந்த கின்னஸ் சாதனை நிகழ்வு பற்றி பேசிய நடிகை கரிஷ்மா கபூர், இந்த சுதந்திர தின நாளில் ரக்சா பந்தன் கொண்டாட்டத்தில் சென்னை வந்திருப்பது ரொம்பவே மகிழ்ச்சி தருகிறது. மேலும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் உபயோகித்து கின்னஸ் சாதனை செய்த இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்த்து வியந்துபோனேன். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இந்த ஷாம்பூவை உபயோகித்து தங்கள் கைகளில் எதுவும் கறை எதுவும் படியவில்லை என கைகளை உயர்த்திக் காண்பித்தபோது நிஜமாகவே பிரமித்துப் போனேன். இப்படி ஒரு செயலை ஊக்கப்படுத்துவதற்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்றார்.

    நடிகர் ஆர் கே பெருமிதம்

    நடிகர் ஆர் கே பெருமிதம்

    நடிகர் ஆர்கே பேசும்போது, வெளிநாட்டில் இருந்து எத்தனையோ தயாரிப்புகள் வந்துள்ளன இந்தியாவில் ஒரு புதிய டெக்னாலஜியுடன் ஒரு தயாரிப்பைக் கண்டுபிடித்து, உலகம் முழுவதும் பிரஷ், பவுடர் பயன்படுத்தி டை அடித்துக் கொண்டு இருந்தவர்களை ஹேர் கலர் ஷாம்பூ என்கிற எளிய பயன்பாட்டிற்கு அழைத்து வந்ததில் பெரிய சாதனை படைத்துள்ளோம். வெளிநாட்டிற்கு இந்த புதிய கண்டுபிடிப்புகள் சென்றபோது இந்தியாவில் கண்டுபிடித்ததா, அதுவும் தமிழ்நாட்டில் கண்டுபிடித்ததா, கைகளில் ஒட்டாதா என எதையும் நம்பாமல் சந்தேகத்துடனேயே கேட்டனர். இதுவரை அவர்கள் தாங்கள் கடினமாக உபயோகித்து வந்த முறைக்கு மாற்றாக, எளிமையான ஒரு விஷயத்துடன் வியாபாரத்தில் நாங்கள் குதிப்பதை அவர்கள் விரும்பவில்லை. அதனாலேயே சந்தேகப்பட்டார்கள்.

    நரைமுடி கருப்பு

    நரைமுடி கருப்பு

    எல்லாரும் கேள்வி கேட்கிறார்கள். அவர்களின் சந்தேகத்தை போக்குவதற்காகவே என்ன செய்யலாம் என நினைத்தபோது, உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த கின்னஸ் சாதனையை முயற்சிக்கலாமே என்கிற எண்ணம் தோன்றியது.. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெறும் கைகளில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை எடுத்து தங்கள் நரை முடி உள்ள இடங்களில் தடவி, தங்கள் முடி கருப்பானதையும், கைகளில் கறை படியாததையும் காட்டியதன் மூலம் இந்த கின்னஸ் சாதனை வெற்றி பெற்றுள்ளது...

    தமிழனின் தயாரிப்பு

    தமிழனின் தயாரிப்பு

    உலக அளவில் சுமார் 40 நாடுகளில், ஒரு தமிழனுடைய தயாரிப்பால் அங்கு உள்ளவர்களின் தலைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு என்னால் ஏற்றுமதி செய்ய முடியும், அந்த வியாபாரத்தை இந்தியாவிற்கு எடுத்து வரமுடியும் என்கிற மிகப்பெரிய போராட்டத்தினுடைய ஒரு மைல்கல் தான் இந்த சாதனை.

    கைகளில் கிளவுஸ் அணியாமல் இப்படி ஹேர் டை பயன்படுத்துகிறீர்களே, இது சரியானதா என்று என்னிடம் கேட்டார்கள். மிகவும் சென்சிட்டிவான பகுதியான தாடி மற்றும் மீசை அமைந்துள்ள உதட்டு பகுதியில் அதிக அளவில் கெமிக்கல் கலந்த டையைத்தான் இதுவரை பயன்படுத்தி வந்துள்ளோம் கைகளுக்கு கையுறை அணியவில்லையா என்று கேட்கும் நீங்கள் உதடுகளுக்கு எந்த கிளவுஸ் போடுவீர்கள். அப்படி சில ஹேர் கலர் டை உதடுகளில் பட்டு இறந்தவர்கள் எத்தனை பேர் என அவர்களிடம் கேட்டேன்.

    மிகப்பெரிய போராட்டம்

    மிகப்பெரிய போராட்டம்

    இந்தியனாய், தமிழனாய் ஒரு புதிய தயாரிப்பை எடுத்துக்கொண்டு போகும்போது, அதை சரி என்று நிரூபிப்பதற்கு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. வெளிநாட்டில் இருந்து ஒரு தயாரிப்பை இந்தியாவில் கொண்டு வந்து விற்கும்போது அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே நாம் கேட்டுக்கொள்கிறோம்.. ஆனால் நாம் இங்கிருந்து தயாரிப்புகளை எடுத்துச்செல்லும்போது எண்ணற்ற கேள்விகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அமெரிக்காவில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் இந்தியாவிற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இந்தியாவில் இருக்கின்ற செருப்பு தொழில் செய்து கொண்டிருக்கிற ஒரு தொழிலதிபர் வெளிநாட்டிற்கு செல்வது என்பது கடினமாக இருக்கிறது.. இதுதான் உண்மை..

    சுதந்திர தினத்தில் கின்னஸ் சாதனை

    சுதந்திர தினத்தில் கின்னஸ் சாதனை

    இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்துவதற்கு ஆகஸ்ட் 15ஆம் தேதியை நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் வெள்ளையனே வெளியேறு என்ற சுதந்திரத்திற்காக போராடியது போல், நம் தலையில் இருந்து நிரந்தரமாக வெள்ளைக்காரர்கள் போல ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த வெள்ளை முடிகளையும் அகற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளோம். இந்த சாதனை இந்தியாவின் சாதனை.. இந்த உலக நாடுகளில் எங்களுடைய உழைப்பையும் எங்களுடைய வியர்வையையும் எடுத்துச்சென்று, தமிழன் தலை நிமிர்ந்து நிற்பான் என்பதற்கு உதாரணமாக இந்த படைப்பை கொண்டு செல்கிறோம் என்கிறார் ஆர்கே பெருமையுடன்.

    English summary
    GUINNESS WORLD RECORDS® by gathering more than 1006 participants in one place applying world’s first VIP Natural Hair Colour Shampoo simultaneously within the stipulated time. The successful record attempt was to create and increase awareness about the important aspect and special features of the VIP’s new Natural Hair Colour Shampoo.This unique event was held EVP Film City, Poonamallee, Chennai on Thursday, 15th August, 2019.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X