இன்றைய ரேஸில் வெல்லப் போவது யார்? வேட்டையா, பட்டதாரியா?

By Mayura Akilan

இன்று வெளியாகும் நான்கு திரைப்படங்களில் வேலையில்லா பட்டதாரியும், சதுரங்க வேட்டையும் நேருக்கு நேர் மோதுகின்றன.

ரஜினி, கமல் படங்கள் மோதுவதைப்போல, விஜய், அஜீத் படங்கள் மோதுவதைப்போல இந்த இரு படங்களில் எந்தப் படம் வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் பரபரத்துக்கிடக்கிறது.

இதற்கு காரணம் இரண்டு படங்களுமே கோலிவுட் சினிமா உலகில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டுமே மீடியம் பட்ஜெட் படங்கள் என்றாலும் இரு படங்களுக்குமே திரை உலகில் நல்ல பெயர் ஏற்பட்டிருக்கிறது.

சினிமா ஏரியாவின் முக்கியமானவர்கள் இந்த இரண்டு படத்தையும் பார்த்து விட்டார்கள். இதுதான் ஜெயிக்கும், அதுதான் ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டாத குறையாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கேமராமேன்களின் போட்டி

கேமராமேன்களின் போட்டி

வேலையில்லா பட்டதாரியை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி இருக்கிறார். சதுரங்க வேட்டையில் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் ஹீரோவாக நடித்திருக்கிறார். இஷாரா ஹீரோயின்.

ட்ரெயிலர்கள் பரபரப்பு

ட்ரெயிலர்கள் பரபரப்பு

இரண்டு படத்தின் டிரைலர்களுமே இணைய தளத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

எதிர்பார்க்கு தனுஷ்

எதிர்பார்க்கு தனுஷ்

தனுஷின் சொந்த தயாரிப்பு, அதோடு அவருடைய 25படம் உள்ளிட்ட காரணங்களால் படம் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

கட்டாய வெற்றி அவசியம்

கட்டாய வெற்றி அவசியம்

இந்தியில் வேகமாக வளர்ந்து வந்தாலும் தனுசுக்கு தமிழில் சமீபகாலமாக படங்கள் சரியாக போகவில்லை. சற்குணம் இயக்கிய நய்யாண்டி, பரத்பாலாவின் மரியான் படங்களின் தோல்வி அடுத்து அவருக்கு ஒரு கட்டாய வெற்றி தேவைப்படும் நேரத்தில் இந்தப் படம் வெளிவருகிறது.

மிஸஸ் அமலாபால்

மிஸஸ் அமலாபால்

அமலாபாலின் திருமணத்துக்கு பிறகு வெளிவரும் முதல் படம் என்பதால் அவரும் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

வேட்டை எப்படி இருக்கு

வேட்டை எப்படி இருக்கு

ஒரு படம் வெளிவருதற்கு முன்பே அந்தப் படம் பற்றி சினிமா ஏரியாவில் பரபரப்பாக பேசுவார்கள். அப்படி பேசப்படுகிற படமாக மாறி இருக்கிறது சதுரங்க வேட்டை. சில கோடிகளில் இயக்குநர் மனோபாலா தயாரித்த இந்தப்படத்தை பார்த்த உடனேயே பலகோடிக்கு வாங்கி விட்டார் திருப்பதி பிரதர்ஸ் உரிமையாளர் சுபாஷ் சந்திரபோஸ்.

பட்டையை கிளப்பும் விளம்பரம்

பட்டையை கிளப்பும் விளம்பரம்

இந்த இரண்டு படங்களுக்குமே தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலும் பரபரப்பாக விளம்பரம் செய்யப்படுகிறது. மக்களை தியேட்டருக்கு வரவழைக்க பல்வேறு யுக்திகளையும் கையாண்டு வருகின்றனர்.

இருக்கு ஆனா இல்லை

இருக்கு ஆனா இல்லை

இன்றைய ரேஸில் ‘இருக்கு ஆனா இல்லை' என்ற திரைப்படமும் இன்றைய ரேஸில் வெளியாகியுள்ளது. வைரம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஆர்பிபி பிலிம் பேக்டரி வெளியிட்டிருக்கும் படம். கே.எம். சரவணன் இயக்கத்தில் ஷமிர் இசையமைப்பில் விவிந்த், ஈடன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

தலைகீழ்

தலைகீழ்

மாதா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ரெக்ஸ் ராஜ் இயக்கத்தில் ஆதிஷ் உத்ரியன் இசையமைத்திருக்கும் படம். ராகேக்ஷ, தேஜமை மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ரேஸில் 4 பலத்த போட்டி 2

ரேஸில் 4 பலத்த போட்டி 2

இன்றைய ரிலீஸ் ரேஸில் நான்கு படம் ஓடினாலும் வேலையில்லா பட்டதாரிக்கும் சதுரங்க வேட்டைக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது. யாருக்கு வெற்றி கிட்டப்போகிறதோ?.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X