twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இவர்களால் இதை ஏன் செய்ய முடியவில்லை?

    |

    சென்னை: தேடும்போதே நல்ல களிமண் போல இருக்க வேண்டும் என்று நடிகர் நடிகைகளைத் தேடி பிடிப்பதில் வல்லவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அப்போதுதான் அவர்களை தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடிக்க வைக்க முடியும் என்று நினைப்பவர்.

    இவர் போலவே இவரது சிஷ்ய பிள்ளை பாக்கியராஜும் புதுமுகம் அறிமுகம் செய்வதில் வல்லவர். பாரதிராஜா அறிமுகப்படுத்தியவர்கள் இன்று வரை கலை உலகில் பலர் கோலோச்சி வருகின்றனர்.

    நடிகர்களில் பாக்கியராஜ், சுதாகர், நவரச நாயகன் கார்த்திக் என்று பலரை சொல்லலாம். நடிகைகளில் ராதிகா, ராதா, ரேவதி, ரஞ்சனி, ரமா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

    இயக்குநர் கே.பாலச்சந்தர்

    இயக்குநர் கே.பாலச்சந்தர்

    இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் தனது மகளை தயாரிப்பாளராக்கி மட்டுமே வெற்றி கண்டார். வேறு விதத்தில் தனது வாரிசுகளை திரை உலகத்துக்கு பயன்படுத்தவில்லை. இவர் உருவாக்கிய நட்சத்திரங்கள் ஏராளம். இவர் நினைத்து இருந்தால், இவர் வீட்டு பேர பிள்ளைகள் வரை யாராவது ஒருத்தரை கலைத் துறையில் காலத்துக்கு ஏற்ப அறிமுகப்படுத்தி, தாங்களே வாய்ப்புக்களாக அள்ளித் தந்து இருக்கலாம்.

    இயக்குநர் பாரதிராஜா

    இயக்குநர் பாரதிராஜா

    இயக்குநர் பாரதிராஜா தனது மகன் பெயரில்தான் மனோஜ் கிரியேஷன்ஸ் என்று படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தார். முதன் முதலில் தாஜ்மஹால் என்று ஒரு படத்தில் தனது மகன் மனோஜை அறிமுகப்படுத்தினார். அடுத்து ஒரு படத்திலும் வில்லனாக நடிக்க வைத்தார். நல்ல நடிகனாகத்தான் மனோஜும் ஜொலித்தார். ஆனாலும் பட வாய்ப்புக்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மனோஜ் வேறு பிசினெஸ் என்று இறங்கிவிட்டார்.

    பாக்கியராஜ் இயக்குநர்

    பாக்கியராஜ் இயக்குநர்

    இயக்குநர் பாக்கியராஜ் தனது மகன் சாந்தனுவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். பின்னர் கதாநாயகனான பின்னும் பெரிதாக வாய்ப்புக்கள் ஏதும் இல்லை. அப்படித்தான் அவர் தனது மகளுக்கும் அருமையான கதையை ரெடி செய்து நடிக்க வைத்தார். அவருக்கும் சுத்தமாக வாய்ப்பே இல்லை. நடிப்பைத் தவிர வேறு கலைத் திசையிலும் அவர்களால் திரும்ப முடியவில்லை. .

    இப்போதைய இயக்குநர்கள்

    இப்போதைய இயக்குநர்கள்

    இப்போதைய இயக்குநர்கள் நடிகர்கள் தங்களது வாரிசுகளை ஏதாவது ஒரு துறையில் வளரும் பருவத்திலேயே அறிமுகம் செய்து விடுகிறார்கள். அதில் புகழும் அடைந்து விடுகிறார்கள். நடிகர் சிவ கார்த்திகேயன் தனது மகளை குழந்தை பாடகியாக அறிமுகம் செய்து, அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆகி உள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் தனது மகனை நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் காமெடி நடிகனாக்கி இருக்கார். இவர் மகனின் காமெடி நடிப்பை பலரும் பாராட் டி வருகின்றனர்.

    English summary
    The filmmaker is looking for actresses who want to be good clay while searching for her role as director Imam Bharathiraja.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X