TTF Vasan: நண்பர்கள்தான் சப்போர்ட்.. ஜம்முனு தாலி கட்டும் TTF வாசன்.. கல்யாண வீடியோ வந்தாச்சு!
கோவை: TTF வாசன் வாசன் என்றால் சர்ச்சை, சர்ச்சை என்றால் TTF வாசன் எனக் கூறும் அளவுக்கு அவரது சேட்டைகள் அந்த அளவுக்கு உள்ளது. அவர் நடத்தி வந்த யூடியூப் சேனல் மற்றும் பைக் சாகசங்கள் மூலம் அவர் பிரபலமடைந்தார். குறிப்பாக இவருக்கு 2கே கிட்ஸ்களுக்கு மத்தியில் பெரிய ஈர்ப்பே இருந்தது. இவரது சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகமானதால் காவல்துறை இவரைக் கண்டிக்க, அதன் பின்னர் தனது நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட்டு வந்தார். இப்படி இருக்கும்போது அவருக்கு திருமணம் என்று சொன்னால் யார் நம்புவார்கள். ஆனால் அவருக்கு திருமணம் முடிந்து அது தொடர்பான புகைப்படங்கள் வெளியானது. இப்படி இருக்கும்போது TTF வாசனின் நெருங்கிய நண்பன் அஜீஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் TTF வாசனின் திருமணம் தொடர்பான வீடியோவப் பகிர்ந்துள்ளார்.
முதலில் தனது திருமணம் தொடர்பாக TTF வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னை சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களுக்கு தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட வீடியோவில், " எனக்கு கல்யாணம் ஆகப்போதுனு நினைக்கிறேன். நான் ராஜஸ்தானில் ரைட் செய்து கொண்டு இருந்தேன். திடீரென எனது மாமன் மகள் போன் செய்து, ரொம்பவும் எமர்ஜென்சி நீ வந்தே ஆகனும்னு சொல்லிட்டாங்க. நானும் அங்கிருந்து காரில் வந்து விட்டேன். எனது மாமன் மகள் ஸ்வீட்டு எனது அத்தைக்கு போன் செய்து நாங்கள் 5 ஆண்டுகள் காதலிக்கிறோம் என்று சொல்லிவிட்டார்.

இதுக்கு அப்புறம் வீட்டுக்கு போக மாட்டேன் என்று சொல்லி என்னுடனே வந்துவிட்டார். அதனால, எனக்குத் தெரிந்து நாங்கள் கல்யாணம் செய்து விடுவோம் என்று நினைக்கிறேன். இன்னும் மூன்று மாசம் டைம் கொடு ஸ்வீட்டு, என்னோட படம் ரிலீஸ் ஆகிடும். அதுக்கு அப்புறம் வந்து கெத்தாக பொண்ணு கேட்கிறேன். அது இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்ல என்று சொன்னேன்.
ஆசை: எனது அத்தையிடம் இது தொடர்பாக பேசிவிட்டேன். மாமாவிடம் இது தொடர்பாக இன்னும் பேசவில்லை. எனது மாமாவுக்கு இந்த விஷயம் தெரியுமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டோம் என்பது மட்டும் தெரியும் என்று நினைக்கிறேன். அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ரொம்பவும் ஆசை. எனக்கு அப்பா இல்லை என்பதால் எனது அப்பாவை நான் எப்படி எல்லாம் பார்த்துக் கொள்ள நினைத்து வைத்திருந்தேனோ, அதேபோல மாமனாரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளது" என்று பேசி இருந்தார். இந்த வீடியோ பெரிய அளவில் வெளியானது.

வீடியோ: இவரது திருமணம் தொடர்பான புகைப்படங்கள், குறிப்பாக TTF வாசன் தாலி கட்டும் புகைப்படம், மெட்டி அணிவிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இவர் மாலை மாற்றி தாலி கட்டும் வீடியோவை TTF வாசனின் நண்பர் அஜீஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நண்பனுக்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவிலும் டிடிஎஃப் வாசனின் காதல் மனைவியின் முகத்தைக் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











