அது எப்படி வாத்தியாரே.. எல்லா படத்துலேயும் ஒரே இடத்துல அடி படுது.. வைரலாகும் தனுஷ் மீம்!

சென்னை: நடிகர் தனுஷ் நடித்த எல்லா படங்களிலும் அவருக்கு ஒரே இடத்தில் அடிபடுவதை இந்த லாக் டவுன் நேரத்தில் ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளது வைரல் மீமாக மாறியுள்ளது.

Recommended Video

பட்ட இடத்தில் படும் | Dhanush injury Troll

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தனுஷ், ஜகமே தந்திரம் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

கைவசம் நிறைய படங்களை வைத்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் தனுஷ் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் சண்டை

ரசிகர்கள் சண்டை

விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை ட்விட்டரை கதறவிட்டு வரும் நிலையில், இடையே தனுஷ் ரசிகர்களும் தங்கள் பங்குக்கு சண்டை போட துவங்கி விட்டனர். விஜய், அஜித்திற்கு பிறகு யார் மாஸ் என்ற ரசிகர்களின் மன நிலையே இப்படியொரு ரசிகர்கள் சண்டை அதிகரிக்க காரணமாகி விட்டது.

40 படங்கள்

40 படங்கள்

கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என இதுவரை நடிகர் தனுஷ் 40 படங்களில் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 40வது படமான ஜகமே தந்திரம் வரும் மே 1ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பால், ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் ஜூலை மாதத்துக்கு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் பர்த்டே

தனுஷ் பர்த்டே

வரும் ஜூலை 28ம் தேதி நடிகர் தனுஷுக்கு 37 வயது நிறைவடைகிறது. சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் தனுஷின் பிறந்த நாள் வர 100 நாட்கள் இருப்பதாக அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ஹாஷ்டேக் உருவாக்கி வேற லெவலில் டிரெண்ட் செய்தனர். சூர்யா, சிம்பு ரசிகர்களுடன் தனுஷ் ரசிகர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.

டெடிகேஷன்

டெடிகேஷன்

அப்பா மற்றும் அண்ணன் தயவால் சினிமாவுக்கு வந்த நடிகர் என்ற அவச்சொல்லை தனது திறமையான நடிப்பால் நடிகர் தனுஷ் முறியடித்துள்ளார். வெற்றிமாறன் காம்போவில் வெளியான தனுஷ் படங்களில் அவரது டெடிகேஷன் ரசிகர்களை வெகுவாக கவரும் வண்ணம் இருந்திருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படத்திற்கு பல விருதுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம கண்டுபிடிப்பு

செம கண்டுபிடிப்பு

இந்த லாக் டவுனில் யார் யாரோ, எதை எதையோ கண்டு பிடிக்கிறார்கள். இந்த நெட்டிசன் தனுஷ் நடித்த படங்களில் எல்லாம் அவருக்கு கண்ணுக்கு கீழே கன்னத்தில் ஒரே இடத்தில் அடிப்பட்டு இருப்பதை கண்டு பிடித்துள்ளார். தனுஷ் நடித்த 3, தொடரி, அசுரன், எனை நோக்கிப் பாயும் தோட்டா, கொடி, மாரி, மரியான் என பல படங்களில் இந்த காயம் இருப்பதை காண முடிகிறது.

எப்படி வாத்தியாரே

எப்படி வாத்தியாரே

கலகலப்பு படத்தில் வரும் சந்தானத்தின் காமெடியை வைத்து, "எல்லா படத்துலேயும் ஒரே இடத்துலேயே அடி பட்டு இருக்கு.. அது எப்படி வாத்தியாரே" என கலாய்க்கும் மீம் செம வைரலாகி வருகிறது. சிலர், ஒரே மேக்கப் மேன் போட்டதால், அப்படி இருக்கும் என்றும், சிலர் அந்த இடத்தில் அடிபட்டு இருப்பது விஷுவலாக இம்பேக்ட் கொடுக்கும் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: dhanush memes தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X