»   »  ஓவியா முதல் நயன்தாரா வரை... 2017ல் வைரலான போட்டோக்கள்

ஓவியா முதல் நயன்தாரா வரை... 2017ல் வைரலான போட்டோக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாரா, ஓவியா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இந்த ஆண்டு வைரலாகின.

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிக்கிறார்கள். ஏன், இருவருக்கும் ரகசியமாக கேரளாவில் திருமணம் நடந்துவிட்டதாகக் கூட கூறப்படுகிறது.

இந்நிலையில் விக்கி வேறு நயன்தாராவுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். 2017ம் ஆண்டு சமூக வலைதளங்களில் வரைலான புகைப்படங்களை பார்ப்போம்.

நயன்தாரா

நயன்தாரா

விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொண்டாடினார் நயன்தாரா. அப்போது அவர்கள் சேர்ந்து எடுத்த செல்ஃபி வெளியாகி வைரலானது.

காதலர்

காதலர்

ஸ்ருதி ஹாஸன் தனது காதலர் மைக்கேல் கோர்சேலுடன் சேர்ந்து நடிகர் ஆதவ் கண்ணதாசனின் திருமணத்திற்கு வந்தார். அவர்கள் ஜோடியாக வந்தபோது எடுத்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.

நாகசைதன்யா

நாகசைதன்யா

நடிகை சமந்தா, தனது காதலரான நாகசைதன்யாவை இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகின.

ஜோதிகா

ஜோதிகா

மகளிர் மட்டும் படத்திற்காக ஜோதிகா புல்லட் ஓட்டிப் பழகினார். சூர்யா தனது மனைவி ஜோதிகாவுக்கு புல்லட் ஓட்ட கற்றுக் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.

தனுஷ்

தனுஷ்

சக்க போடு போடு ராஜா இசை வெளியீட்டு விழாவில் சிம்புவும், தனுஷும் நட்பு பாராட்டி கட்டித் தழுவியது அவர்களின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.

ஓவியா

ஓவியா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை பெறாவிட்டாலும் பலரின் அன்பை பெற்றவர் ஓவியா. அவர் பிக் பாஸ் வீட்டில் சிரித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது.

English summary
Photos of actresses Nayanthara, Samantha, Oviya, Shruti Haasan, Jyothika have gone viral on social media in the year 2017. Nayanthara's picture with boyfriend Vignesh Shivan was one of the most viral pictures.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X