மாமா விழுந்துட்டாரு.. அழறாரு பாவம்...கதறிய குழந்தை.. வைரலாகும் மாஸ்டர் க்ளைமாக்ஸ்!
சென்னை : மாஸ்டர் க்ளைமாக்ஸ் காட்சியை பார்த்த விட்டு குழந்தை ஒன்று கதறி அழும் காட்சி இப்போது பிரபலமாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் ஜனவரி 13 ம் தேதி ரிலீசானது. இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதனால் இப்படம் விஜய் ரசிகர்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளதோ, அதே அளவு வரவேற்பை விஜய் சேதுபதி ரசிகர்களிடமும் பெற்றுள்ளது.

இப்படத்தின் பல காட்சிகள் இப்போது பிரபலமாகி வரும் நிலையில், குழந்தை ஒன்று க்ளைமாக்ஸ் காட்சியை பார்த்து விட்டு, கதறி அழும் காட்சியும் பிரபலமாகி வருகிறது. க்ளைமாக்சில் விஜய், விஜய்சேதுபதியை அடிக்கும் காட்சியை டிவியில் பார்க்கும் குழந்தை ஒன்று கதறி அழுகிறது.
மாமா விழுந்திட்டாரு...மாமா பாவம்...மாமா பாவம்...மாமா அழுகுறார் என சொல்லி விஜய் சேதுபதியை பார்த்து அந்த குழந்தை அழுகிறது. 15 விநாடிகள் மட்டும் கொண்ட இந்த வீடியோ யூட்யூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேகமாக பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவை பலரும் டவுன்லோட் செய்து, ஸ்டேட்டசாக வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











