மாயாண்டி குடும்பத்தாரே தோற்றுடும் போல.. நடுவுல பா.இரஞ்சித்.. சுற்றிலும் செம மகிழ்ச்சி
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பா. இரஞ்சித். கடைசியாக அவர் தங்கலான் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோரை வைத்து வேட்டுவம் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். விரைவில் படம் ரிலீஸாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக சார்பட்டா பரம்பரை 2 படத்தையும் இயக்குகிறார். இந்நிலையில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த பா.இரஞ்சித் அட்டகத்தி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. அதனையடுத்து கார்த்தியை வைத்து இயக்கிய மெட்ராஸ் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி கபாலி, காலா என தொடர்ச்சியாக இயக்கினார். அந்தப் படங்கள் டீசன்ட்டான வெற்றியை பெற்றன. அப்படங்களுக்கு பிறகு முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

தோல்வி முகத்தில் இரஞ்சித்: சார்பட்டா பரம்பரை படத்தின்வரையிலுமே இரஞ்சித்தின் கிராஃபிலும் எந்த இறக்கமும் இல்லாமல் இருந்தது. அப்படத்துக்கு பிறகு துஷாரா விஜயனை லீடு ரோலாக வைத்து நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அந்தப் படம் மோசமான விமர்சனத்தை சந்தித்து; கடுமையான ட்ரோலுக்கும் உள்ளானது. சமூக வலைதளங்களில் பெண்ணியவாதிகளின் பதிவுகளை பார்த்து அவர் கதை எழுதியிருப்பார் போல என்ற விமர்சனமும் ஓபனாகவே எழுந்தது நினைவுகூரத்தக்கது.
விக்ரமுடனும் தோல்விதான்: இப்படிப்பட்ட சூழலில்தான் விக்ரமை ஹீரோவாக வைத்து தங்கலான் படத்தை இயக்கினார். பெரிய எதிர்பார்ப்பை படம் சந்தித்திருந்தது. அபாரமாக உழைக்கும் விக்ரமும், தனது படைப்பின் மூலம் காத்திரமான அரசியலை பேசும் இரஞ்சித்தும் சேர்ந்திருப்பதால் தரமான சம்பவத்தை படத்தில் செய்வார்கள் என்றுதான் கருதப்பட்டது. ஆனால் இரஞ்சித்தின் மேக்கிங் ரசிகர்களிடமிருந்து அந்நியமாக இருந்தார்கள் படத்தை படுதோல்வி அடைய செய்துவிட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் இயக்குநருடைய மேக்கிங்தான். அவரும் பின் நாட்களில் அதை ஏற்றுக்கொண்டார்.
அடுத்த படங்கள்: அவர் அடுத்ததாக தினேஷ், கலையரசன் உள்ளிட்டோரை வைத்து வேட்டுவம் படத்தை இயக்கியிருக்கிறார். அதன் ஷூட்டிங்கில் விபத்தெல்லாம் ஏற்பட்டது. ஒருவழியாக அத்தனை பிரச்னைகளும் முடிந்து ஷூட்டிங்கும் ஓவராகிவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை 2 படத்தை உருவாக்குகிறார். இந்த இரண்டு படங்களுமே அவரது கரியரில் மட்டும் தமிழ் சினிமாவிலேயே பெரிய மைல் கல்லாக அமையும் என்பது அவரது ரசிகர்களின் எண்ணமும், கருத்தும்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் இரஞ்சித் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது இயக்குநர்கள் இரஞ்சித், அமீர், சமுத்திரகனி, மிஷ்கின் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அப்போது அவர்கள் ஏதோ தங்களுக்குள் கமெண்ட்ஸ் அடிக்க; அத்தனை பேருமே வாய் விட்டு சிரித்தார்கள். அதுவும் நடுவில் இரஞ்சித்தை அமர வைத்துக்கொண்டு சீனியர் இயக்குநர்கள் இப்படி ஜாலியாக இருந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மாயாண்டி குடும்பத்தார் படமே இவர்களிடம் தோற்றுவிடும் போல; அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள். இது கடைசிவரை இப்படியே நீடிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications
