நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடிய பாம்பு.. வைரலாகும் ஆலியா பட் அம்மா எடுத்த வீடியோ!

மும்பை: இயக்குநர் மகேஷ் பட்டின் மனைவியும் முன்னாள் நடிகையுமான சோனி ரஸ்தான் வீட்டு நீச்சல் குளத்தில் பாம்பு ஒன்று வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு மகேஷ் பட் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என பலவிதமான வதந்திகள் பாலிவுட்டில் பரவி வருகின்றன.

இந்நிலையில், நடிகை ஆலியா பட் அம்மா எடுத்துள்ள இந்த வீடியோவை பார்த்த பல பிரபலங்கள் தங்கள் ரியாக்‌ஷனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பழம்பெரும் நடிகை

பழம்பெரும் நடிகை

இங்கிலாந்தை சேர்ந்த சோனி ரஸ்தான், இயக்குநர் மகேஷ் பட்டை திருமணம் செய்து கொண்டு பாலிவுட்டில் செட்டில் ஆனார். ஆலியா பட்டின் அம்மாவான இவர், 1981ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வெளியான ஹிரித்திக் ரோஷனின் வார் படம் வரை பல படங்களில் நடித்துள்ளார்.

வீட்டுக்கு வந்த விருந்தாளி

வீட்டுக்கு வந்த விருந்தாளி

இயக்குநர் மகேஷ் பட்டின் வீட்டு நீச்சல் குளத்தில் பாம்பு ஒன்று இறங்குவதை பார்த்த அவரது மனைவியும் நடிகையுமான சோனி ரஸ்தான், அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தண்ணீர் குடிக்க வீட்டுக்கு புது விருந்தாளி வந்துருக்காங்க என கேப்ஷன் கொடுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

செம குளியல்

செம குளியல்

முதலில் தண்ணீர் மட்டும் குடித்து விட்டு சென்று விடும் என நினைத்தேன். ஆனால், நீச்சல் குளத்தில் முழுவதுமாக இறங்கி செம குளியல் போட்டு சென்று இருப்பதை மற்றொரு வீடியோவாக எடுத்து அதையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் வைரலாக்கி உள்ளார்.

நாகினி

நாகினி

சோனி ரஸ்தான் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை பார்த்த பாலிவுட் பிரபலங்கள், நாகினி பார்ட் 2வா என்றும், அது வெறும் தண்ணி பாம்பு ஒன்றும் பயமில்லை. வெயிலுக்கு நல்லா இதமா குளித்து விட்டு போகுது. உங்களுக்கு பயமே இல்லையா? இந்த இடத்தில் நான் பாம்புகளை பார்த்து 9 வருடத்திற்கும் மேல் ஆகிறது என சில பாலிவுட் பிரபலங்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

ஆலியா பட் படம்

ஆலியா பட் படம்

பாலிவுட் பிரபலங்களின் பல படங்கள் நேரடியாக OTT தளத்தில் ரிலீசாக உள்ளது. அக்‌ஷய் குமாரின் லக்‌ஷ்மி பாம் படத்தைத் தொடர்ந்து, மகேஷ் பட் இயக்கத்தில் ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள சதாக் 2 படம் வரும் ஜூலை 10ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்கிற கோஷங்களும் பாலிவுட்டில் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X