அடேங்கப்பா! இது புது ரூட்டா இருக்கே.. சல்மான் கானுக்கு கேக் ஊட்டிய சன்னி லியோன்.. வைரலாகும் வீடியோ!

சென்னை: பாலிவுட் பிக்பாஸ் சல்மான் கானுக்கு கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கேக் ஊட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நேற்று முன் தினம் தனது 54வது பிறந்த நாளை கொண்டாடினார்.

பாலிவுட்டில் பல ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் சல்மான் கானுக்கு முன்னாள் போட்டியாளரான நடிகை சன்னி லியோன் பிக்பாஸ் சீசன் 13வது செட்டிற்குள் கேக் எடுத்து வந்து சல்மான் கானுக்கு ஊட்டும் வீடியோவை தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

சல்மான் கான் பிறந்தநாள்

சல்மான் கான் பிறந்தநாள்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் கடந்த டிசம்பர் 27ம் தேதி தனது 54வது பிறந்த நாளை கொண்டாடினார். பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சல்மான் கானுக்கு நேரிலும், சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

கண்ணீர் விட்ட சல்மான் கான்

சல்மான் கான் பிறந்த நாளன்று எக்கச்சக்க ரசிகர்கள், அவரை காண திரண்டிருந்தனர். தனது ரசிகர்களின் அன்பைக் கண்ட நடிகர் சல்மான் கான் கண்களில் ஆனந்த கண்ணீர் கசிந்தது. அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

போராட்டத்தால் முடங்கிய தபங் 3

போராட்டத்தால் முடங்கிய தபங் 3

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்து வருகின்றன. பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் யாரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தன. அந்த நேரத்தில் தபங் 3 வெளியானதால், எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை.

கேக் ஊட்டிய சன்னி லியோன்

கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 13வது சீசனை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சன்னி லியோன், நடிகர் சல்மான் கானுக்கு பிக்பாஸ் செட்டில் கேக் எடுத்து வந்து ஊட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

எந்த சீசனில்

எந்த சீசனில்

இந்தியில் தற்போது 13வது பிக்பாஸ் சீசன் நடைபெற்று வருகிறது. 5வது சீசனில் நடிகை சன்னி லியோன் போட்டியாளராக பங்கேற்றார். அதற்கு பிறகு தான் ஆபாச நடிகை என்பதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது பாலிவுட் நடிகையாக சன்னி லியோன் உயர்ந்துள்ளார்.

க்யூட் சன்னி

சல்மான் கானுக்கு கலர்ஸ் டிவி சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டியை நடிகை சன்னி லியோன் மூலம் கொண்டாடியுள்ளது. அதன் வீடியோ புரொமோவை பார்த்த ரசிகர்கள், நடிகை சன்னிலியோனை க்யூட் என்றும் ஹாட் என்றும் வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X