மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்ட விஜய் - வேட்பாளர்.. ஆனால் அதைச் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டாரே!
சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றது. குறிப்பாக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த விஜய் அனைவருடனும் தனித் தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றது. வேட்பாளர் ஒருவர் விஜய் உடன் புகைப்படம் எடுக்கும் போது விஜய் அவரது சினிமாவில் செய்த ஒரு ஆக்ஷனை அவருடன் இணைந்து செய்ய ஆசைப்பட்டார். ஆனால் விஜய் அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
அப்படி இருக்கையில் உடனே விஜய்யிடம் எனக்கு முத்தம் கொடுங்க அண்ணா என்று கூறியதும், விஜய் கொஞ்சம் கூட தாமதிக்காமல் சிரித்தபடியே வாஞ்சையுடன் முத்தம் கொடுத்தார். அடுத்து உடனே அந்த வேட்பாளரும் விஜய்க்கு முத்தம் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

டிரைவர் மகனுக்கு: அதேபோல் நடிகர் விஜய் தனது பர்சனல் டிரைவர் ராஜேந்திரனின் மகன் சபரி நாதனுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்துள்ளார். வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் முடிந்ததும் வேட்பாளர்கள் ஒவ்வொருவருடனும் விஜய் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவரது பர்சனல் டிரைவர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதனும் விஜய் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது மிகவும் எமோஷனல் ஆகி, விஜய் காலில் விழுந்து வணங்கினார், சபரிநாதன். சபரிநாதன் அழுததைப் பார்த்து, அவரது கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவரை ஆசுவாசப்படுத்தி மேடையில் ராஜேந்திரன் மற்றும் சபரிநாதன் என இருவரது தோள் மீதும் கை போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இருமுனைப் போட்டி: இந்த தேர்தலில் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டுக்கான 234 தொகுதி வேட்பாளர்கள், பாண்டிச்சேரிக்கான 30 தொகுதி வேட்பாளர்கள் என அனைவரையும் மொத்தமாக அறிவித்தார். மார்ச் 30 ஆம் தேதி முதல் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் பரவலாக இந்த தேர்தலை நான்கு முனைப் போட்டி என்று கூறப்பட்டு வரும் நிலையில், விஜய் இந்த தேர்தலை இரண்டு முனைப் போட்டி என்று தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் அந்தந்த தொகுதியின் காப்பாளர்கள். என்னால் எப்போதும் எல்லா தொகுதிகளிலும் இருக்க முடியாது, எனது பிரதிநிதிகளாக நான் இவர்களை உங்களுக்காக தேர்வு செய்துள்ளேன். எனவே இவர்கள் அனைவரையும் வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் பேசினார்.


Click it and Unblock the Notifications











