8 ஏக்கர்..20 கோடியில் பண்ணை வீடு..ஆடம்பர பங்களா வாங்கிய அனுஷ்கா ஷர்மா!

மும்பை : அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி தம்பதியினர் ஒரு ஆடம்பரமான பண்ணை வீட்டை விலைக்கு வாங்கியுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஜோடி நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

பின்னர் இவர்கள் இருவரும் கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியில் நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டனர்.

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தார். இவரது தந்தை கர்னல் அஜய் குமார் சர்மா ராணுவத்தில் அதிகாரி. அனுஷ்காவின் சகோதரர் கர்ணேஷ் சர்மாவும் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். அனுஷ்கா தனது திரையுலக வாழ்க்கையில் இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். திரையுலகிற்கு அறிமுகம் ஆகும் போதே யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டுடியோவுடன் 'ரப் நே பனா தி ஜோடி, பத்மாஷ் கபன்னி மற்றும் பேண்ட் பாஜா பாராத் ஆகிய 3 படங்கள் ஒப்பந்தமானார் அனுஷ்கா சர்மா.

காதல் திருமணம்

காதல் திருமணம்

பிரபல நாயகியாக வலம் வந்த அனுஷ்கா கடந்த 2013ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை சந்தித்தார். இருவரும் ஒரு ஷாம்பு விளம்பரத்தில் இணைந்து பணியாற்றினர். பின்னர் காதல் வசப்பட்ட இருவரும் சில வருடங்கள் டேட்டிங் செய்தனர். திருமணத்திற்கு பின்னும் அனுஷ்கா சர்மா படங்களில் கவனம் செலுத்தி வந்தார். பின் இவர் கர்ப்பம் ஆனதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். கடந்த ஆண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு வாமிகா என்று பெயர் வைத்தனர்.

அழகான பெண் குழந்தை

அழகான பெண் குழந்தை

பொதுவாக பிரபலங்கள் தங்கள் குழந்தை பிறந்து முதல் நாள் முதலே புகைப்படங்களை வெளியிட்டுவிடுவார்கள்.ஆனால், இந்த தம்பதிகள் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகப் போகும் நிலையில், குழந்தையின் முகத்தை எந்த ஒரு சமூக வலைதளப் பக்கத்திலோ அல்லது புகைப்படமாகவோ வெளியிடவில்லை. குழந்தை பிறந்ததில் இருந்தே அனுஷ்கா சர்மா நடிப்பிற்கு ஓய்வு கொடுத்து இருந்தார். தற்போது அனுஷ்கா சர்மா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

பல கோடியில் பண்ணை வீடு

பல கோடியில் பண்ணை வீடு

தற்போது, அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி தம்பதியினர் அலிபாக்கில் ஒரு ஆடம்பரமான பண்ணை வீட்டை வாங்கியுள்ளனர். ஜிராத் கிராமத்திற்கு அருகே 8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள பண்ணை இல்லத்திற்கு அனுஷ்கா மற்றும் விராட் ரூ.19.24 கோடி செலவிட்டுள்ளனர். மேலும் அரசின் கருவூலத்தில் ரூ.1.15 கோடி டெபாசிட் செய்தனர். ஆசிய கோப்பை போட்டிக்காக விராட் துபாயில் இருப்பதால் இந்த ஒப்பந்தத்தை விராட் கோலியின் சகோதரர் விகாஸ் முடித்து வைத்தார். சுங்கவரியாக ரூ.3.35 லட்சமும் செலுத்தி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X