கிரிக்கெட் என்னங்க கிரிக்கெட்.. மனைவி அனுஷ்கா சர்மாவை வேற லெவலில் புகழ்ந்த விராட் கோஹ்லி!
சென்னை: மனைவி அனுஷ்கா சர்மாவை கணவர் விராட் கோஹ்லி வேற லெவலில் புகழ்ந்து பேசியுள்ளார்.
நடிகை அனுஷ்கா சர்மாவும் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இடை இடையே அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் அவர்கள் பிரிந்து விட்டதாக தகவல் பரவி வந்தது.
மேலும் அனுஷ்கா சர்மா திருமணத்தை தள்ளிப்போடுவதுதான் பிரச்சனைக்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி இத்தாலியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் திடீரென திருமணம் செய்து கொண்டனர்.

புகழ்ச்சி
இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனைவி அனுஷ்கா சர்மாவை புகழ்ந்து வருகிறார். தற்போது வெஸ்ட்இன்டிஸில் விளையாடி வரும் விராட் கோஹ்லி தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாடினார்.

அனுஷ்கா சர்மா கிடைத்தது
அப்போது தனது மனைவி அனுஷ்கா சர்மாவை அவர் புகழ்ந்து தள்ளினார். தனது வாழ்க்கையில் கிரிக்கெட்டை விட பெரிய விஷயம் அனுஷ்கா சர்மா தனக்கு மனைவியாக கிடைத்ததுதான் என கூறியுள்ளார்.

சரியான வழிகாட்டி
தனக்கு கிரிக்கெட்டை விடவும் மிகப்பெரிய வரம் தனது மனைவி அனுஷ்கா சர்மாதான் என்று தெரிவித்துள்ளார். தான் சரியான துணையை தனக்கு தேர்ந்தெடுத்திருப்பதாக கூறியுள்ள விராட் கோஹ்லி தன்னை அனுஷ்கா சரியான பாதையில் தன்னை வழி நடத்துவதாகவும் கூறியிருக்கிறார்.
வைரல் போட்டோக்கள்
இதனிடையே விராத் கோஹ்லி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பீச்சில் காற்றுவாங்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கமென்ட்
அண்மையில் அனுஷ்காவின் பிகினி போட்டோவை பார்த்து இதயத்தை போட்டு கமென்ட் தெரிவித்திருந்தார் விராட் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











