Don't Miss!
- News
"எலும்புக்கூடா" போச்சே.. குளக்கரையில் காருக்குள் ஜோடி.. திடீர்னு அந்த சம்பவம்.. விக்கித்த காஞ்சிபுரம்
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
விக்ரம் பிரபு மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கோஹ்லி: வீடியோ இதோ
Recommended Video
சென்னை: விக்ரம் பிரபு மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் கோஹ்லி.
நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் கோஹ்லி. தன் மகனை வாழ்த்தியதற்கு நன்றி தெரிவித்ததுடன், கோஹ்லியின் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் விக்ரம் பிரபு.

Super sweet of you @imVkohli to take time to send a video msg for my boy #Virat on his birthday. He’s super excited for this and happy for our win in WI. 😊👍 pic.twitter.com/1BpceYMOHK
— Vikram Prabhu (@iamVikramPrabhu) September 3, 2019
விக்ரம் பிரபுவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் குட்டி விராட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு விராட் பிறந்தநாளுக்கு பிரபாஸ் தான் பாகுபலி படத்தில் பயன்படுத்திய வாள் போன்று ஒரு குட்டி வாள் செய்து அதை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் பிரபு மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த தனசேகரனின் இயக்கத்தில் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு கதை எழுதியதுடன் தயாரிக்கவும் செய்கிறார் மணிரத்னம்.
நடிகரை பார்க்க 900 கிலோமீட்டர் நடந்தே வந்த ரசிகர்: வைரல் வீடியோ
வானம் கொட்டட்டும் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மடோனா செபாஸ்டியன் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் சேர்ந்து நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம் பிரபுவின் சகோதரியாக நடிக்கிறார். பாக்யராஜின் மகன் சாந்தனு, நந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் தங்கை கதாபாத்திரம் ஏற்றுள்ளார். வானம் கொட்டட்டும் படத்தின் கதை மணிரத்னத்துடையது என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
விக்ரம் பிரபுவின் கெரியரில் இந்த படம் முக்கியமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.