விராட்டா பர்வம் 1992 : காதல் ஏக்கத்தில் காத்திருக்கும் சாய் பல்லவி… வைரலாகும் வீடியோ
சென்னை: விராட்டா பர்வம் 1992 திரைப்படத்தில் சாய் பல்லவி காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்து நக்சலைட்டாக மாறும் கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இத்திரைப்படத்தில் சாய் பல்லவியின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் கசிந்து வைரலாகியுள்ளது.
நடிகை சாய் பல்லவி, தமிழ் சினிமாவில் என்னதான் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், ராசியில்லாத நடிகையாகவே பார்க்கப்படுகிறார். இதற்கு உதாரணம் மாரி 2 மற்றும் என்.ஜி.கே ஆகிய திரைப்படங்கள். இதனால் வேறு வழியில்லாத அவர், தனக்க சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கும் தெலுங்கு சினிமாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்க தொடங்கியுள்ளார்.
நடிகை சாய் பல்லவி கடைசியாக நடித்த அதிரன், என்.ஜி.கே போன்ற படங்களுக்கு பிறகு, அவரது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வேணு உடுகுலா இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு விராட்டா பர்வம் 1992 என்று பெயரிடப்பட்டுள்ளது.

சாய் பல்லவி ராணா டகுபதி
இத்திரைப்படம் 1990ஆம் ஆண்டுகளில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிப்படுகிறது. இதில் சமூக சீர்திருத்த கருத்துக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்னன. பாகுபலி படத்திற்காக உடல் எடையை அதிகரித்த ராணா டகுபதி, இந்த படத்திற்காக அப்படியே நேர் எதிராக மொத்தமாக உடல் எடையை குறைத்துவிட்டார்.

காதல் தோல்வி
இப்படத்தில் ராணா டகுபதி அரசியல் தலைவராக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சாய் பல்லவி காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்து நக்சலைட்டாக மாறும் கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
வைரல் வீடியோ
தற்போது இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவியின் தோற்றம் சமூக ஊடகங்களில் கசிந்துள்ளது. அதில் நடிகை சாய் பல்லவி, தனது பயணப் பையுடன் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருக்கிறார். பாவாடை தாவணியில் கிராமத்து பெண் தோற்றத்தில் காணப்படும் சாய் பல்லவியைப் பற்றி ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

ரசிகர்கள் ஆர்வம்
மேலும் படத்திலிருந்து சாய் பல்லவியின் தோற்றம் ரசிகர்கள் மற்றும் திரைப்பட பார்வையாளர்களிடையே ஆர்வத்தை அதிகரித்தது. மேலும் விராட்டா பர்வம் 1992 திரைப்படத்தில் நடிகர் ராணா டகுபதி, நடிகை நந்திதா தாஸ் மற்றும் நடிகை பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

உண்மை சம்பவங்கள்
இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவியின் கதாபாத்திரம் குறித்து மேலும் அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். வீடியோ எப்படி கசிந்தது என்பது பற்றி ஆதாரம் தெரியவில்லை, விராட்டா பர்வம் 1992 திரைப்படம் பெரும்பாலும் உண்மையாக நடந்த இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











