ரவுடி பேபிக்கு பிறந்தநாள்.. 'விராட்ட பர்வம்' படக்குழு கொடுத்த அசத்தல் சர்ப்ரைஸ்.. என்னன்னு பாருங்க!

சென்னை: நடிகை சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு விராட்ட பர்வம் படக்குழு அவருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை வழங்கியிருக்கிறது.

Recommended Video

Angel Messaged | Sillu Karuppatti Halitha Flooded with love

நடிகை சாய் பல்லவி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு தமிழில் சூர்யாவுடன் என்ஜிகே என்ற படத்தில் நடித்தார் சாய் பல்லவி.

மாரி படத்தில் அவர் ஆடிய ரவுடி பேபி பாடல் பல மில்லியன் வியூஸ்களை குவித்தது. உடம்பை ரப்பராக வளைத்து அவர் போட்ட ஸ்டெப்புகள் ஒவ்வொன்றும் பெரும் பாராட்டை பெற்றது.

பிரபலங்கள் ஃபேன்

பிரபலங்கள் ஃபேன்

பிரபலங்கள் பலரும் அந்த பாடலுக்கு ஃபேனாகிவிட்டனர். சிலர் அந்த பாடலுக்கு நடனமாடியும் டிக்டாக் செய்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

அவருக்கு பிரபலங்கள் பலரும் ரசிகர்கள் பலரும் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது லவ் ஸ்டோரி மற்றும் விராட்ட பர்வம் ஆகிய இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

விராட்ட பர்வம் போஸ்டர்

விராட்ட பர்வம் போஸ்டர்

அவரது பிறந்த நாளை முன்னிட்டு விராட்ட பர்வம் படகு குழுவினர் அவருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை அளித்துள்ளனர். அதாவது விராட்ட பர்வம் படக்குழு சாய் பல்லவிக்கு பரிசு வழங்கும் வகையில் அப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

ராணாவுக்கு ஜோடி

ராணாவுக்கு ஜோடி

இந்த போஸ்டரை பிரபல திரைப்பட விமர்சகரான தரன் ஆதர்ஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விராட்ட பர்வம் படத்தில் ராணா டக்குபதிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும் நந்திதா தாஸ், பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். விராட்ட பர்வம் படத்தை வேணு உடுகுலா இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X