ViRosh Premier League: இதுவரை யார் திருமணத்திலும் நடக்காத ஒன்று.. அரங்கேற்றிய ராஷ்மிகா - விஜய்

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா - நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்படி இருக்கையில் இவர்களின் திருமண கொண்டாட்டம் மிகவும் கோலாகலமாக தொடங்கிவிட்டது. இதில் என்ன ஸ்பெஷாலான விஷயம் என்றால் இவர்களின் திருமணத்தில் இதுவரை நடைபெற்ற நட்சத்திரங்களின் திருமணத்தில் நடைபெறாத பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதாவது, பிரபலங்களின் திருமணம் என்றால் சங்கீத் நிகழ்ச்சி என்ற ஒன்று தற்போது இந்தியா முழுவதுமே தவிர்க்க முடியாததாகி விட்டது. இப்படி இருக்கையில் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களது திருமணத்தை மேலும் ஸ்பெஷலாக்க, மற்ற திருமணங்களில் இருந்து வேறுபட்டுக் காட்ட, பல வித்தியாச வித்தியாசமான யோசனைகளைச் செய்து தங்களது திருமணத்தை மிகவும் ஸ்பெஷலாக மாற்றி வருகிறார்கள்.

ViRosh Premier League Rashmika Mandanna and Vijay Deverakonda Turn Captains for Their Wedding Cricket Match
Photo Credit:

ப்ரீமியர் லீக்: அப்படி இருக்கும்போது நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் திருமண கொண்டாட்டத்தில் ViRosh Premier League என்ற விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறார்கள். அதாவது நீச்சல் குளத்தில் வாலி பால் விளையாட்டு, அதேபோல் ஐடிசி மொமண்ட்ஸ் உதய்பூர் ஹோட்டலிலேயே உள்ள மைதானத்தின் ViRosh Premier League என்ற கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.

கேப்டன்கள்: அவர்களின் திருமணத்திற்கு மிகவும் ஸ்பெஷலான நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் படி வந்த விருந்தினர்களை இரண்டு அணிகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்படுகிறதாம். இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இரண்டு அணிகளுக்கும் ராஷ்மிகா மந்தனா ஒரு அணி கேப்டனாகவும், விஜய் தேவரகொண்டா ஒரு அணியின் கேப்டனாகவும் செயல்படுகிறாராம்.

ViRosh Premier League Rashmika Mandanna and Vijay Deverakonda Turn Captains for Their Wedding Cricket Match
Photo Credit:

இன்னும் பிளான்: இப்படியான விளையாட்டுக்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு ஜப்பானிய கூல் டிரிங்ஸ்கள் பரிமாறப்படுகிறதாம். இது தொடர்பான தகவல்களை இணையவாசிகள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா என இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் மிகவும் எக்ஸ்குளுசிவான புகைப்படங்களை பார்த்தே பலரும் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது போலயே என்று பகிர்ந்து வருகிறார்கள். அதேபோல், இவை இல்லாமல் மேலும் சில விளையாட்டுகளும் ஸ்பெஷலான மொமண்ட்களும் நடத்த இருவரும் பல மாதங்களாக திட்டமிட்டுள்ளனராம். அதை எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X