ViRosh Wedding: சாதி, மதம் எல்லாம்.. ராஷ்மிகா மந்தனாவுக்கு விஜய் தேவரகொண்டா அம்மா போட்ட கன்டிஷன்
ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தாயார் போட்ட கன்டிஷன்ஸ் குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது விஜய் தேவரகொண்டாவின் அம்மா ராஷ்மிகாவிடம் நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும் அவரது தயார் அளித்த பழைய பேட்டியைப் பகிர்ந்து ராஷ்மிகாவுக்கு என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்தார்கள். அதன் பின்னர் டியர் காம்ரேட் படத்திலும் இணைந்து நடித்தார்கள். இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, தற்போது திருமண பந்தத்தில் இருவரும் காலடி எடுத்து வைக்க தயாராக உள்ளனர். இந்நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.

இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இவர்களின் திருமணத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் தான் அழைக்கப்பட்டுள்ளனர். மற்ற அனைவரையும் ரிசப்ஷனுக்கு அழைத்துள்ளார்கள். ரிசப்ஷன் வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இப்படி இருக்கையில் தனது மகனைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்ட கேள்விக்கு விஜய் தேவரகொண்டாவின் அம்மா அளித்த பதில் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கன்டிஷன்: அதாவது, சாதி, மதம் போன்ற எந்த எதிர்ப்புகளும் நாங்கள் சொல்லப்போவது இல்லை. விஜய் தேவரகொண்டாவை நன்றாக புரிந்து கொண்டு, முழு மனதுடன் நேசித்து, நன்றாக கவனித்துக் கொள்ளக் கூடிய பெண் மருமகளாக வந்தால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவின் தாயார் இவ்வாறு கூறியது நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தான் என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

ரசிகர்கள் உற்சாகம்: மேலும் பலரோ, நீங்கள் கவலையே பட வேண்டாம், ராஷ்மிகா மந்தனா உங்கள் மகனுக்குப் பிடித்த மனைவியாக என்றைக்கும் இருப்பார். நீங்களே பூரித்துப் போகும் அளவுக்கு அவர்களின் திருமண வாழ்க்கை இருக்கும் என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும் இவர்களின் திருமண புகைப்படங்களைப் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications