‛வாழு வாழ விடு அவ்வளவுதான் தத்துவம்‘… தல அஜித்தை பின்பற்றும் விருதுநகர் கலெக்டர்!

சென்னை : விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தல அஜித்தின் வாழு வாழ விடு என்ற வாசகத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

2013ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மேகநாதன் ரெட்டி. 2015ஆம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை சேலம் மாவட்டம் மேட்டூரில் சார் ஆட்சியராக பணியாற்றினார்.

2021 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி பணிகள் துணை ஆணையாளராகவும் பணியாற்றி வந்த இவர் தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியராக உள்ளார்.

வாழு வாழ விடு

வாழு வாழ விடு

அஜித்தின் தீவிர ரசிகரான இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛வாழு வாழ விடு அவ்வளவுதான் தத்துவம்' என பகிர்ந்துள்ளார். மேலும், தனது ட்விட்டர் கவர் போட்டோவிலும் அஜித் தார்பாலைவானத்தில் பைக்கின் நிழலில் ஓய்வாக அமர்ந்து இருந்த புகைப்படத்தை வைத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

குட் நைட் தம்பி

குட் நைட் தம்பி

அதேநேரத்தில் விஜய்யின் தீவிர ரசிகரான ஒருவர், நாளைக்கு ஸ்கூல் இருக்கா என்று கேட்டுள்ளார். இதற்கும் பதில் அளித்துள்ள கலெக்டர் தம்பி... நாளைக்கு மழைலாம் வராது... நீ ஸ்கூல் இருக்கு..ஏற்கனவே ஓவர் லேட்... போயிட்டு தூங்கு குட் நைட் என கூறியுள்ளார்.

கிண்டல் செய்கிறார்

கிண்டல் செய்கிறார்

இதைபார்த்த மற்றொரு நெட்டிசன்ஸ், தான் அஜித் பேன் என்பதால் விஜய் ரசிகரை ஸ்கூல் ஸ்டூடன்ட் என கிண்டல் செய்தாரா வி.நகர் கலெக்டர் என்ற கோணத்திலும் மீம்ஸ்சும், நீங்க அஜித் பேனா என்றும் மாறி மாறி கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அஜித்தின் மெசேஜ்

அஜித்தின் மெசேஜ்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் , திரைத்துறையில் 30வது ஆண்டில் அடியெடுத்து வைத்ததை முன்னிட்டு, மக்களுக்கு குறுந்தகவல் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில்., ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலையாளர்கள் என அனைவரும் ஒரே நாணயத்தின் மூன்று பகுதிகள். ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் நியாயமற்ற பார்வைகளையும் நான் முழு மனதாக ஏற்றுக்கொள்கிறேன். வாழு, வாழ விடு என்று கூறியிருந்தார். அந்த வாசகத்தைத்தான் விருதுநகர் கலெக்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X