twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதுரையை அலறவிட்ட ‘விருமன்‘..டெல்லி Vs ரோலக்ஸ் ஒரே மேடையில்..காலம் தான் அதை முடிவு செய்யும்!

    |

    சென்னை : நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் 'விருமன்' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் விழா இன்று மதுரை ராஜா முத்தையா மண்டபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இதில் நடிகர் சூர்யா, கார்த்திக், அதிதி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, யுவன்சங்கர் ராஜா, முத்தையா, சூரி, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்த விழாவில் பேசிய சூர்யா, டெல்லி Vs ரோலக்ஸ் என்ன இணைந்து நடிக்க முடியுமா என்பதை காலம் தான் அதை முடிவு செய்யும் என்றார்.

    விருமன் இசைவெளியீட்டு விழா.. “ரோலக்ஸ்.. ரோலக்ஸ்“என ரசிகர்கள் கூச்சலிட்டதால் சலசலப்பு!விருமன் இசைவெளியீட்டு விழா.. “ரோலக்ஸ்.. ரோலக்ஸ்“என ரசிகர்கள் கூச்சலிட்டதால் சலசலப்பு!

    விருமன்

    விருமன்

    கார்த்தி தற்போது நடித்து முடித்துள்ள 'விருமன்' திரைப்படம், ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இதை தொடர்ந்து தற்போது இன்று மதுரையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்தி வருகிறது படக்குழு. மதுரையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ராஜா முத்தையா மன்றத்தின் இந்த இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டு நடந்து வருகிறது.

    முன்னணி நடிகர்கள்

    முன்னணி நடிகர்கள்

    இந்த படத்தை, சூர்யாவின் 2டி தயாரித்துள்ளது. இதில் நாயகியாக பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள விருமன் திரைப்படத்தில், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், சரண்யா பொன்வண்ணன், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்திற்கான ஒளிப்பதிவை செல்வகுமார் மேற்கொள்ள படத்தொகுப்பை வெங்கட்ராஜன் செய்துள்ளார்.

    மன்னித்துவிடுங்கள்

    மன்னித்துவிடுங்கள்

    இந்த விழாவின் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் ரோலக்ஸ் ரோலக்ஸ் என கத்தி சலசலப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து, அமைதியாக இருக்கும் படி சூர்யா கேட்டுக்கொண்டதை அடுத்து ரசிகர்கள் அமைதியானார்கள். இதையடுத்து,மேடையில் பேசிய சூர்யா, உங்களை பல மணிநேரம் காக்கவைத்ததுக்கு முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார். மேலும், மதுரையில் கதைகளுக்கு பஞ்சம் கிடையாது, சிறு வயதிலிருந்து பல முறை இங்கு வந்து பாசத்தை பெற்று இருக்கிறேன். விருமன் இசைவெளியீட்டு விழா இங்கு நடப்பதை நினைத்து பெருமை அடைகிறேன் என்றார்.

    நடிகர் கார்த்தி தான்

    நடிகர் கார்த்தி தான்

    என்னைவிட சிறந்த நடிகர் கார்த்தி தான் இதை நான் பல முறை சொல்லி உள்ளேன். இந்த படத்திலும் கார்த்தி சிறப்பாக நடித்து இருக்கிறார். தன்னை தானே மீண்டும் மீண்டும் ரேவைண்ட் செய்து வரும் இயக்குனர் ஷங்கர். அப்படி பட்ட ஒரு ஆளுமையிடம் இருந்து வந்த ஆதிதி ஷங்கருக்கு இது முதல் படம் போல இல்லாமல் அழகாக நடித்து இருக்கிறார். அதேபோல, சூரி,சிங்கம் புலி, வடிவுகரசி என அனைவரும் அவர்களின் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர் என்றார்.

    மகிழ்ச்சி அளிக்கிறது

    மகிழ்ச்சி அளிக்கிறது

    தேசிய விருது அறிவிப்பின் போது நான் ஊரில் இல்லை, பொண்ணு படிப்புக்காக நியூயார்க்கில் இருந்தேன். அந்த விஷயம் எனக்கு புரியவே 4 மணிநேரம் ஆச்சு. ஆனால், அதற்குள் நீங்கள் கொண்டாடிய விதம் மிக பெரிய சந்தோஷமா இருந்தது இந்த அன்புதான் எனக்கு என்றும் வேண்டும் என்றார். தொடர்ந்து அவர் பேசிய போது, ரசிகர்கள் ரோலக்ஸ் என கத்தியதால், உடனே சூர்யா கையில் கட்டி இருந்த ரோலக்ஸ் வாட்சை அனைவருக்கும் காட்டி இந்த Rolex வாட்ச் உங்களாலதான் கிடைச்சது பரிசு, கமல் சார் கொடுத்த பரிசு என்றார். டெல்லி ரோலக்ஸ் என்ன செய்ய வேண்டும்...இணைந்து செய்யதை காலம் தான் அதை முடிவு செய்யும் என்றார்.

    English summary
    Viruman Audio & Trailer launch function.. Suriya emotional speech on stage
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X