நைட் ஷோவெல்லாம் அதிகரிக்குது.. விரட்டி விரட்டி வசூலிக்கும் விருமன்.. விநியோகஸ்தர்கள் ஹேப்பி!

சென்னை: விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் ஓனர்களை நீண்ட நாள் கழித்து சந்தோஷமாக்கி உள்ளது கார்த்தியின் விருமன்.

Recommended Video

Viruman Movie Review | Yessa ? Bussa ?| Viruman |Karthi|*Review

பல பிரபல திரையரங்குகளில் அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டு விருமன் படத்துக்கு இரவு நேர கூடுதல் காட்சிகள் எல்லாம் ஒதுக்கப்பட்டுள்ளன.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள விருமன் திரைப்படம் கிராமங்களில் திருவிழா கொண்டாட்டமாக மாறி உள்ளது.

வெற்றி தியேட்டரில் வெறித்தனம்

வெற்றி தியேட்டரில் வெறித்தனம்

விக்ரம் படத்தில் வெற்றி தியேட்டரை காட்டியதில் இருந்தே ரசிகர்களின் கோட்டையாக மாறி விட்டது வெற்றி தியேட்டர். விருமன் படத்தின் பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் வெறித்தனமாக ஆடும் ஆட்டத்தை 2டி நிறுவனமே தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறது.

விஜய் டிவியில் ஆடியோ லாஞ்ச்

விஜய் டிவியில் ஆடியோ லாஞ்ச்

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் காலை 8 மணிக்கு விருமன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதன் புரமோவையும் சூர்யாவின் 2டி நிறுவனம் ஷேர் செய்து ரசிகர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாட காத்திருக்கிறது.

ஹவுஸ்ஃபுல்

ஹவுஸ்ஃபுல்

சுல்தான் படத்திற்கு பிறகு ஒரு வருடத்திற்கும் மேலான இடைவெளியுடன் வெளியாகி உள்ள கார்த்தியின் விருமன் படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விருமன் திரைப்படம் திரையிட்ட தியேட்டர்கள் எல்லாம் வீக்கெண்ட் முழுவதும் ஹவுஸ்ஃபுல்லாக காட்சியளிப்பதாக தயாரிப்பு தரப்பே ஆதாரங்களுடன் அறிவித்துள்ளது.

நைட் ஷோ அதிகரிப்பு

நைட் ஷோ அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை வெளியான விருமன் படம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை என தொடர்ந்து நான்கு நாட்கள் வசூல் வேட்டை நடத்தும் விதமாக நைட் ஷோ, ஸ்பெஷல் ஷோ, எக்ஸ்ட்ரா ஸ்க்ரீன்ஸ் என ஏகப்பட்ட ஏற்பாடுகளை தியேட்டர் நிர்வாகம் கடைபிடித்து வருவதாக சூப்பரான அப்டேட்கள் வெளியாகி உள்ளன.

மாலை மரியாதை

மாலை மரியாதை

மனுஷனுக்கு சொந்தம் பந்தம், மரியாதை, உறவுமுறை எல்லாம் எந்தளவுக்கு முக்கியம் என்பதை உணர்த்தி உள்ள விருமன் திரைப்படம் தங்களுக்கு மிகுந்த லாபத்தை அளித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் நடிகர் கார்த்தி, இயக்குநர் முத்தையா உள்ளிட்ட விருமன் படக்குழுவினருக்க பெரிய மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ள புகைப்படமும் டிரெண்டாகி வருகிறது.

வெற்றி தொடருமா

வெற்றி தொடருமா

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி உள்ள விருமன் திரைப்படம் குறைவான பட்ஜெட்டில் உருவாகி வசூலை வாரி குவித்து வரும் நிலையில், பொன்னியின் செல்வன் படத்திற்கும் இப்படியொரு பிரம்மாண்ட வெற்றி கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும், தீபாவளிக்கு வெளியகவுள்ள சர்தார் படமும் சாதனை படைக்க வேண்டும் என கார்த்தி ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X