யூடியூபில் வெளியானது ’விருமன்’ மூவி..ரசிகர்கள் அதிர்ச்சி..நடவடிக்கை எடுத்த நிறுவனம்

சென்னை: நடிகர் கார்த்தியின் விருமன் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஓடிடியில் வெளியாகும் முன் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

Karthi Speech | விட்டுக்கொடுத்து செல்வதுதன் அழகு... Viruman Success meet *Kollywood

நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியாகி தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விருமன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் சூர்யா தயாரிப்பில் வெளியாகியுள்ள விருமன் படம் ஒரு சிறிய யூட்யூப் சேனலால் யூட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்தியின் விருமன் சூர்யாவுக்கு வெற்றிப்படம்

கார்த்தியின் விருமன் சூர்யாவுக்கு வெற்றிப்படம்

நடிகர் சூர்யா படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவர் தயாரித்த பல படங்கள் வெற்றியடைந்துள்ளது. நடிகர் கார்த்தியை வைத்து சூர்யா சில படங்களை தயாரித்துள்ளார். தற்போது சூர்யா தயாரிப்பில் வெளிவந்த கார்த்தி, இயக்குநர் சங்கர் மகள் அதிதி நடித்த விருமன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ரசிகர்களுக்கு செம எண்ட்டெர்டெயின்மெண்டான படம் விருமன்

ரசிகர்களுக்கு செம எண்ட்டெர்டெயின்மெண்டான படம் விருமன்

விருமன் படத்தை இதற்கு முன் கார்த்தியை வைத்து கொம்பன் படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். கார்த்தியின் வழக்கமான ஸ்டைலில் வெளிப்படும் கிராமத்து கதாநாயகன் கதையே இந்த படத்திலும் திரைக்கதையாக எடுக்கப்பட்டுள்ளது. தந்தை மகன் இடையே நடக்கும் மோதல் பின்னர் எவ்வாறு முடிகிறது என்பதை கதையாக சொல்லியுள்ளார்கள். இந்த படத்தில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமானதும், அவர் பல படங்களில் நடித்தது போல் இயல்பாக நடித்ததும், படத்தில் வெளிவந்த கஞ்சா பூ கண்ணாலே பாடலும் படத்துக்கு புதுமை செய்தது எனலாம்.

 வெற்றிகரமாக திரையரங்கில் ஓடும் விருமன்

வெற்றிகரமாக திரையரங்கில் ஓடும் விருமன்

படம் வெளியாகி அனைத்து சென்டர்களிலும் நன்றாக ஓடியதை அடுத்து அதன் வெற்றி விழாவை சமீபத்தில் விருமன் பட குழுவினர் கொண்டாடினர். இந்த விழாவில் இயக்குநர் முத்தையா உள்ளிட்ட படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் என்கிற முறையில் நடிகர் சூர்யா பிரேஸ்லெட் உள்ளிட்ட பரிசு பொருட்களை கொடுத்து அசத்தினார். இந்த படம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தியேட்டரிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

யூடியூபில் வெளியான விருமன்

யூடியூபில் வெளியான விருமன்

இந்த நிலையில் இன்று காலையில் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக யூடியூபில் விருமன் படம் வெளியாகியுள்ளது. முதலில் இதை நம்ப மறுத்தவர்கள் பின்னர் யூடியூப்பை ஓபன் செய்து பார்த்த பொழுது விருமன் முழு படமும் youtube ல் வெளியாகியிருந்தது. அதுவும் hd பிரிண்டாக படம் வெளியிடப்பட்டிருந்தது. ஒரு சாதாரண ஜி புக் என்கிற youtube சேனல் இந்த படத்தை வெளியிட்டுள்ளது. இந்த படத்தை பார்த்து கீழே கமெண்டில் யூடியூப் சேனலை பாராட்டி வருகின்றனர். அவர்களுக்கு உடனடியாக அந்த யூடியூப் தளத்தினர் பதில் அளித்து வருகின்றனர்.

புதுப்படங்களை வெளியிடுவோம் என கமெண்டில் உறுதியளித்த யூடியூப் நிறுவனம்

புதுப்படங்களை வெளியிடுவோம் என கமெண்டில் உறுதியளித்த யூடியூப் நிறுவனம்

இதே போல் பல படங்களை வெளியிட வேண்டும் என்று கமெண்டில் சில கோரிக்கைகள் வர கட்டாயமாக வெளியிடுவோம் என்று அவர்கள் பதில் அளித்து வருகின்றனர். அடுத்து திருச்சிற்றம்பலம் படத்தை வெளியிட வேண்டும் என்று கேட்க கண்டிப்பாக என்று அவர்கள் பதில் அளித்துள்ளனர். தமிழ் திரை உலகம் கொரோனா காலகட்டத்திற்கு பின்பு மிகப்பெரிய வீழ்ச்சி சந்தித்து தற்போது தான் எழுந்து மூச்சு விட துவங்கியுள்ளது. இந்த நிலையில் இது போன்ற படங்கள் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது யூடியுப் வெளியாவது படத்தின் வசூலை பெருமளவில் பாதிக்கும்.

சில மணி நேரத்தில் படம் நீக்கம்

சில மணி நேரத்தில் படம் நீக்கம்

முன்பு தமிழ் ராக்கர்ஸ் படம் வெளியாவதற்கு முன் அல்லது வெளியான முதல் நாளிலேயே அதற்கான லிங்கை வெளியிட்டு விடுவார்கள் இதனால் பல தமிழ் படங்கள் அடிபட்டன. தற்போது அதே வரிசையில் இந்த youtube சேனல் விருமன் படத்தை வெளியிட்டிருப்பது அந்த படத்தின் வெற்றியை கட்டாயம் பாதிக்கும். இது குறித்து இதுவரை 2டி என்டர்டைன்மெண்ட் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் தற்போது யூடியூபிலிருந்து விருமன் படம் நீக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X