நடிகர் சங்க கட்டிடத்திற்காக ரூ.25 லட்சம் நிதி வழங்கிய விருமன் டீம்

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2019-ல் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், கே.பாக்யராஜ், நாசர் தலைமையிலான அணிகள் போட்டியிட்டன. பல பிரச்சனைகள், கோர்ட் வழக்கு ஆகியவற்றை தாண்டி சமீபத்தில் இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், தலைவராக நாசர், பொதுச் செயலராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்டோர் வெற்றி பெற்று, கடந்த மார்ச் மாதம் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.இதனால் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் மீண்டும் துவங்கப்பட உள்ளதாகவும், இதனை கட்டி முடிக்க ரூ.30 கோடி வரை தேவைப்படும் என்றும் பொது செயலாளரான விஷால் கூறி இருந்தார்.

Viruman movie team donates Rs.25 lakhs to build Actors union building

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, பசுபதி, சோனியா, பிரசன்னா, நந்தா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விஷால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இந்த கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.விஷால் நடித்த லத்தி படத்தின் ஷுட்டிங்கின் போது அவருக்கு பலமுறை காலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து வலியுடன் படத்தில் நடித்து முடித்தார் விஷால். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில் விஷால், மருத்துவமவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொதுக் குழு கூட்டத்தில்,நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடங்குவது, கட்டிட நிதி திரட்டுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், டைரக்டர் வசந்த் உள்ளிட்டோர் நடிகர் சங்க செயற்குழு கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

பின்னர் நடிகர் சங்க கட்டிட நிதியாக சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து நடிகர் சங்க கட்டிட நிதியாக ரூ.25 லட்சத்துக்கான காசோலையை நாசரிடம் வழங்கினர். விருமன் படக்குழு சார்பில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. படக்குழு சார்பில் படத்தின் ஹீரோ கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் சூர்யா இருவரும் இணைந்து வழங்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X