Coolie: ஜெயிலரில் ரம்யா கிருஷ்ணன்.. கூலி படத்துல ‘தக் லைஃப்’ நடிகையை தட்டித் தூக்கிய ரஜினிகாந்த்?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி திரைப்படம் விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மோடி மீண்டும் பிரதமராக உள்ள நிலையில், அந்தப் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திராவில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் தேர்தலுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்த் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கவில்லை என்றாலும் பல அரசியல் தலைவர்கள் இன்னமும் ரஜினிகாந்துடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த நிலையில், அந்த படத்திலேயே வயதானவருக்கு நயன்தாரா எப்படி ஜோடி என்பது போல கேள்வி எழுப்பும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஜெயிலர் படத்தில் நெல்சன் ரம்யா கிருஷ்ணனை தான் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.
இனிமேல் வயதான நடிகைகள் தான்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இனிமேல் வயதான நடிகைகளுடன் நடிக்கலாம் என ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்த நிலையில், தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் நிரோஷா உடன் இணைந்து நடித்தார். இந்நிலையில், கூலி படத்திலும் அதே போல ஒரு வயதான நடிகை தான் ரஜினிக்கு ஜோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஷோபனா இல்லை: தளபதி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஷோபனா கூலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஷோபனா நடிக்கவில்லை என்கிற பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் அடிபட்டு வருகின்றன.
தக் லைஃப் நடிகை: மணிரத்னம் இயக்கி வரும்தக் லைஃப் படத்தில் விருமாண்டி அபிராமி கமலுக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில், அவரையே ரஜினிக்கு ஜோடியாக கூலி படத்தில் புக் செய்யலாம் என்கிற முடிவில் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் கசிந்துள்ளன. சத்யராஜ், ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடன் அபிராமியும் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர்: ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். மேலும், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அமிதாப் பச்சன், பகத் பாசில் மற்றும் ராணா டகுபதி என நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள அந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











