தளபதி 69ல் இணைந்த கமல் பட நடிகை.. என்ன லிஸ்ட் கூடிட்டே போகுது?

சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் தளபதி 69. இந்தப் படம்தான் விஜய்யின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். அவரது கடைசி படம் இது என்பதால் நிச்சயம் இந்தப் படம் மெகா ஹிட்டாக வேண்டும் என்கிற ஆவலில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்தச் சூழலில் தளபதி 69 படத்தில் மேலும் ஒரு நடிகை நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அஜித்துக்கு எப்படி மங்காத்தா படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் மெகா ஹிட்டானதோ அதேபோல் GOAT திரைப்படம் ஹிட்டாகும் என்று எதிர்பார்த்திருந்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதேசமயம் படத்தில் விஜய்யின் வில்லத்தனமான நடிப்பு பலரையும் உச்சகட்ட ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

vijay thalapathy 69 abirami 69

தமிழக வெற்றிக் கழகம்: அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய். ஆனால் மக்களவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. அதேசமயம் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி களமிறங்குகிறது. இதன் காரணமாக விஜய் முழு மூச்சாக அரசியலிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. எனவே இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டுவிட்டார்.

தளபதி 69: இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் விஜய் நடிப்பேன் என்று அறிவித்ததால் அவரது கடைசி படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் எழுந்தது. அவர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக அப்படத்தை ஹெச்.வினோத் இயக்குவார் என்று அறிவிப்பு வெளியானது. இப்போதைய தலைமுறை இயக்குநர்களில் வினோத் வித்தியாசமானவர் என்பதால் தளபதி 69 படத்தில் தரமான பல சம்பவங்கள் இருக்கும் என அவரின் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

தொடங்கிய ஷூட்டிங்: இந்தப் படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். மேலும் பிரேமலு பட புகழ் மமிதா பைஜுவும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். கண்டிப்பாக இதில் அரசியல் டச் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு; அப்படியெல்லாம் எதுவும் இல்லை அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்று வினோத் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதேசமயம் இது தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்ற பேச்சும் ஓடிக்கொண்டிருக்கிறது.

விருமாண்டி அபிராமி: ஆனால் அப்படியே ரீமேக் படம் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் பகவந்த் கேசரிக்கு என்ன மாதிரியான செட்டுகள் எல்லாம் போடப்பட்டனவோ அதேபோன்ற செட்டுகள் இந்தப் படத்துக்கு போடப்பட்டிருக்கின்றன என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. இந்நிலையில் படத்தில் மேலும் ஒரு நடிகை நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி விருமாண்டி படத்தில் நடித்து புகழடைந்த அபிராமி தளபதி 69ல் இணைந்திருக்கிறார்.

விமர்சனம்: இதற்கிடையே விஜய் இப்போதிருந்தே ஷூட்டிங் ஒருபக்கம் அரசியல் மீட்டிங் மறுபக்கம் என்று சுற்றி சுழன்றுவருகிறார். அவரது அரசியல் நிலைப்பாடும், பேச்சும் முழுக்க முழுக்க திமுகவுக்கு எதிராகவே இருக்கிறது. இதன் காரணமாக விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை திமுகவினர் தொடர்ந்து காத்திரமாக விமர்சித்துவருகிறார்கள். அவர்களுக்கு தவெக தொண்டர்களும் கடுமையான எதிர்வினையை ஆற்றிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X