தத்து எடுக்க காரணம் இதுதான்..படப்பிடிப்பில் தினமும் அழுவேன்.. மனம் திறந்த விருமாண்டி அபிராமி!
சென்னை: அந்த படத்திற்கும் எனக்கும் நிறைய கனெக்ஷன் இருக்கு என்பதால், அந்த படத்தின் படப்பிடிப்பில் தினமும் அழுதேன் என்று நடிகை அபிராமி கூறியுள்ளார்.
விருமாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அபிராமி.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், மலையாளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

அமெரிக்காவில் செட்டில்: அதன்பின் வானவில்,தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவருக்கு விரும்பாண்டி படம் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து,ராகுல் என்பரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
அபிராமி பேட்டி: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நானும் என்னுடைய கணவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். அதன்பின் வளர்ந்ததும் இருவரும் வேலையை பார்க்க கிளம்பிவிட்டோம். வேலை நிமித்தமாக அமெரிக்கா சென்ற போது மீண்டும் எங்கள் நட்பு வளர்ந்து அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
தத்து எடுக்க காரணம்: கடந்த ஆண்டு ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறோம். சிறு வயதில் இருந்தே ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அதைத்தான் செய்தேன். அவளுக்கு கல்கி என்று பெயர் வைத்து இருக்கிறேன். ஏன் என்றால் கல்கி என்பது ஒரு அவதாரம், அதை நான் பெண்ணாக பார்க்கிறேன். பெண்ணால் தான் அனைத்தையும் மாற்ற முடியும் என்றார்.
தினமும் அழுவேன்: மேலும், ஆர் யூ ஓகே பேபி படத்தில் நடித்தது குறித்து பேசிய அபிராமி, ஆர் யூ ஓகே பேபி படத்தின் கதையை லட்சுமி மேடம் என்னிடம் சொல்லும் போது ரொம்பவும் உணர்ச்சி பூர்வமாக இருந்ததால், நடிக்க ஒத்துக்கொண்டேன். ஒரு குழந்தையை தத்து எடுப்பதால் அந்த குடும்பத்தினரின் மனவலியை சொல்லும் கதை என்பதால், அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது தினமும் அழுதுக் கொண்டே இருப்பேன் என்று அபிராமி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











