திருமணத்திற்கு வந்தவர்களுக்கு கோஹ்லி, அனுஷ்கா என்ன பரிசு கொடுத்தார்கள் தெரியுமா?
Recommended Video

மும்பை: விராட் கோஹ்லி, அனுஷ்கா தங்களின் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசு அளித்துள்ளனர்.
பாலிவுட் இயக்குனர் ஆதித்யா சோப்ராவின் அறிவுரையின்பேரில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், அனுஷ்காவும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களின் திருமணம் பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.

அனுஷ்கா
கோஹ்லியும், அனுஷ்காவும் தங்களின் திருமண ஏற்பாடுகள் யாருக்கும் தெரியக் கூடாது என்றார்களாம். அதனால் 2 மாதங்களாக ரகசியமாக ஏற்பாடு செய்ததாக டிசைனர் தேவிகா நரேன் தெரிவித்துள்ளார்.

செயல்பாடு
திருமண ஏற்பாடு குறித்து அனுஷ்காவே ஐடியா கொடுத்தார். அவரின் ஐடியாவை நாங்கள் செயல்படுத்தினோம் அவ்வளவு தான். ரகசியமாக திருமண ஏற்பாடுகள் செய்தது கடினமாக இருந்தது என்கிறார் தேவிகா.

ரகசியம்
ரகசியமாக திருமண ஏற்பாடுகள் செய்ததால் முதல் முறை அனுஷ்காவை சந்தித்தபோது அவரின் பெயரை கூறாமல் மணமகள் என்றேன். அதை கேட்ட அனுஷ்கா ஏன் என் பெயரை சொல்லி கூப்பிட வேண்டியது தானே என்று கேட்டார் என தேவிகா கூறியுள்ளார்.

பரிசு
அனுஷ்கா மற்றும் கோஹ்லிக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம். அவர்கள் இருவருக்குமே ரூமியின் கவிதைகள் மிகவும் பிடிக்கும். அதனால் திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளுக்கு ரூமியின் கவிதை தொகுப்பை பரிசளித்தனர் என்று கூறியுள்ளார் தேவிகா.


Click it and Unblock the Notifications











