மரக்கன்றுடன் கோஹ்லி-அனுஷ்கா ரிசப்ஷன் பத்திரிகை: முதல் பத்திரிகை யாருக்கு வச்சிருக்காங்க தெரியுமா?
Recommended Video

மும்பை: விராட் கோஹ்லி, அனுஷ்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பத்திரிகையில் புதுமை செய்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11ம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். வரும் 21ம் தேதி டெல்லியிலும், 26ம் தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதற்கான பத்திரிகையில் இருவரும் புதுமை செய்துள்ளனர்.

பத்திரிகை
கோஹ்லி-அனுஷ்கா திருமண வரவேற்பு பத்திரிகை இருக்கும் பெட்டியில் மரக்கன்று ஒன்று வைத்து கொடுத்து வருகிறார்கள். மும்பையில் ஏராளமான பிரபலங்களுக்கு பத்திரிகை கொடுத்தாகிவிட்டது.

ரோம்
கோஹ்லியும், அனுஷ்காவும் இத்தாலியில் திருமணத்தை முடித்துக் கொண்டு தேனிலவுக்கு ரோம் நகருக்கு சென்றுள்ளனர். திருமண வரவேற்பு முடிந்த பிறகு புத்தாண்டை கொண்டாட தென்னாப்பிரிக்காவுக்கு செல்கிறார்கள்.

ஷாருக்கான்
திருமண வரவேற்பு பத்திரிகையை முதல் ஆளாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுத்துள்ளார் கோஹ்லி. அனுஷ்காவோ தனது முதல் ஹீரோவான ஷாருக்கானுக்கு முதல் பத்திரிகையை கொடுத்துள்ளார்.
பாலிவுட்
கோஹ்லி, அனுஷ்கா திருமண வரவேற்பு பத்திரிகையை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான மகேஷ் பட்.


Click it and Unblock the Notifications











