பட்டையை கிளப்பும் விஷால்... புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சென்னை : நடிகர் விஷாலின் 32வது படத்திற்கு லத்தி சார்ஜ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

8 ஆண்டுகளுக்குப்பிறகு சுனைனா விஷாலுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார்.

விஷால்

விஷால்

நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, துப்பறிவாளன், இரும்புத்திரை, சக்ரா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

விஷாலின் 32வது படம்

விஷாலின் 32வது படம்

இந்நிலையில், விஷாலின் 32-வது படத்திற்கு லத்தி சார்ஜ் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லத்தி சார்ஜ்

லத்தி சார்ஜ்

லத்தி சார்ஜ் என்று பெயரிடப்பட்டுள்ளதால் இத்திரைப்படம் காவல்துறை தொடர்பான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் காவல்துறை அதிகாரியாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் ஏற்கனவே சத்யம், அயோக்யா ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

5 மொழிகளில்

5 மொழிகளில்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை ராணா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரமணா மற்றும் நந்தா இருவரும் தயாரிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு சுனைனா விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

எனிமி

எனிமி

நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த எனிமி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து, தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

வீரமே வாகை சூடும்

வீரமே வாகை சூடும்

இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் வீரமே வாகை சூடும். இதில் ஹயாத்தி, பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர் விஷாலுடன் பணிபுரிந்துள்ளனர். இதற்கு இசையமைப்பாளர் யுவன் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இப்படம் டிசம்பரில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X