விஷாலின் 32வது படம் குறித்து வெளியான புதிய தகவல்!
சென்னை: விஷால் நடிப்பில் இந்த ஆண்டு சக்ரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான எந்த படமும் பெரிதாக அவருக்கு கைகொடுக்கவில்லை.
நடிகராகவும், தயாரிப்பாளராகவும் விஷால் சற்று பின்னடைவையே சந்தித்து வருகிறார் என்பது ரசிகர்கள் அறிந்ததே.

மிகவும் எதிர்பார்ப்பில்
விஷாலின் இந்த நிலை அடுத்த படத்தில் மாறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் "எனிமி" படத்தில் நடித்து வருகின்றனர். கதாநாயகியாக மிருனாளினி நடிக்கிறார். இந்த படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

31வது படம்
இதையடுத்து விஷாலின் 31வது படத்தை புது முக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன. இந்த படத்தின் நடிகர்கள் தேர்வு குறித்து ஏதும் தகவல்கள் வரவில்லை. து.ப.சரவணன் குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் இயக்குனர் கணேஷ் விநாயக் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

லேட்டஸ்ட் அப்டேட்
இதைத்தொடர்ந்து விஷாலின் 32வது படத்தை அடங்கமறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளார் என சில தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வருடத்திலேயே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை Five Star Films நிறுவனம் தயாரிக்கிறது.

தொடர்ந்து படங்கள்
விஷாலின் 32வது படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது. பொம்மை, ஹாஸ்டல், ஓ மணப்பெண்ணே என பிரியா பவானி சங்கருக்கு ஏற்கனவே பல படங்கள் வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











