»   »  தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்கவிருக்கும் விஷால்.. ஜோடி யாரு தெரியுமா?

தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்கவிருக்கும் விஷால்.. ஜோடி யாரு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த 'டெம்பர்' படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷால் நடிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளார். வெங்கட்மோகன் என்பவர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

தெலுங்கில் வெளியான 'டெம்பர்' படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

Vishal to act in temper remake

இந்த நிலையில் 'டெம்பர்' படம் தமிழிலும் ரீமேக்காக இருக்கிறது. இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் வெங்கட்மோகன் இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் ரீமேக் ஆகும் இந்தப் படத்தில் விஷால் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் நடிக்கவுள்ளனர். தற்போது ராஷி கண்ணா 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை லைட் அவுஸ் மூவிமேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார். 'டெம்பர்' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தபின் தொடங்கும்.

Read more about: vishal விஷால்
English summary
Vishal to play the Tamil remake of 'Temper' telugu movie. Rashi Khanna is pairing up with Vishal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X