ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஷால் நடிக்கிறாரா?

சென்னை : இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி உள்ளது.

தர்பார் படத்திற்கு பிறகு விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது கைகூடாமல் போனது.

இந்த நிலையில் விஜய்க்காக எழுதிவைத்த கதையில் நடிகர் விஷால் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.

டெக்னாலஜி கதைக்களத்தை

டெக்னாலஜி கதைக்களத்தை

நடிகர் விஷாலின் திரைப்படங்கள் என்றாலே மினிமம் கேரண்டி இருக்கும். கண்டிப்பாக ஹிட்டாகி வசூலை அள்ளிவிடும் என இருக்கும் பட்சத்தில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போதுள்ள டெக்னாலஜி கதைக்களத்தை கொண்டிருக்க ரசிகர்களிடம் தொடர்ந்து பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. துப்பறிவாளன், இரும்புத்திரை என இவர் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் ஹிட் அடித்தது.

அண்மையில் வெளியான சக்ரா

அண்மையில் வெளியான சக்ரா

நடிகராக அறிமுகமாகி இப்போது வெற்றிகரமான தயாரிப்பாளராக இருக்கும் விஷால் தான் நடிக்கும் திரைப்படங்களை தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமே தயாரித்து வெளியிட்டு வர பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு அண்மையில் வெளியான சக்ரா திரைப்படமும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் வெளியானது.

கைகூடாமல் போனது

கைகூடாமல் போனது

இந்திய அளவில் அனைவராலும் உற்று நோக்கப்படும் மிகச்சிறந்த ஹிட் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தர்பார் படத்தின் சரிவுக்கு பிறகு மீண்டும் நான்காவது முறையாக விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க அது கைகூடாமல் போனது. அதனால் அந்தக் கதையில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்பட்டது.

முற்றிலும் வதந்தி

முற்றிலும் வதந்தி

குறிப்பாக விஜய்க்காக அந்த கதை உருவாக்கப்பட்டதால் ஆக்சன் காட்சிகள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்க அதில் விஷால் நடிக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவிய நிலையில், அது முற்றிலும் வதந்தி என விஷால் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்துவரும் விஷால் அதை முடித்த கையோடு துப்பறிவாளன் பாகம் இரண்டை தானே இயக்க உள்ள நிலையில் ஏ ஆர் முருகதாஸ் படத்தில் கதாநாயகனாக நான் நடிக்கிறேன் என்ற தகவலில் கொஞ்சம் கூட உண்மை இல்லை அதை யாரும் நம்ப வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X