விஷால் - தன்ஷிகா திருமணம்..ஜோராக தொடங்கிய பத்திரிகை வைக்கும் பணிகள்..எங்கே போயிருக்காங்க பாருங்க

சென்னை: அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் விஷால். அதற்கு பிறகு செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி என வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார். ஆனால் தொடர்ந்து அவரால் அந்த வெற்றியை தக்க வைக்க முடியவில்லை. இடையில் சில படங்கள் மட்டுமே அவருக்கு கை கொடுத்தன. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி, ரத்னம் ஆகிய படங்களில் மார்க் ஆண்டனி மெகா ஹிட்டானது. சூழல் இப்படி இருக்க அவர் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஷால் முதலில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்தார். இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த விஷால்; நடிகராக அறிமுகமான பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுதினார். அப்படி அவர் நடித்த தாமிரபரணி, சண்டைக்கோழி, திமிரு ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அதில் விஷாலின் ஆக்‌ஷன் காட்சிகள் பலரையும் ரசிக்க வைத்தது. இதனால் பெரும் ரவுண்டு வருவார் என்று கணிக்கப்பட்டது.

விஷாலுக்கு விழுந்த அடி: ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இடையில் அவருக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு ஹிட்டுக்காக ஏங்கிய விஷால் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் படம் பெரிதாக போகவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடித்துவந்த அவருக்கு எந்தப் படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை. இதற்கிடையே நடிகர் சங்க விவகாரத்தில் சர்ச்சையும், சரத்குமாருடன் மோதலும் எழுந்தது அவருக்கு.

வசூல் சாதனை செய்த மார்க் ஆண்டனி: அந்தவகையில் அவர் கடைசியாக மார்க் ஆண்டனி, ரத்னம் படங்களில் நடித்தார். அவற்றில் மார்க் ஆண்டனி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். எதிர்பார்ப்பில்லாமல் வெளியான அந்தப் படம் மெகா ஹிட்டானது. முக்கியமாக நூறு கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து அவர் ஹரி இயக்கத்தில் நடித்த ரத்னம் திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

அடுத்த படங்கள்: இதற்கிடையே அவர் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் அவருக்கும் மிஷ்கினுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகிக்கொள்ள விஷாலே அப்படத்தை இயக்கவிருக்கிறார். படத்தின் பணிகள் எப்போது தொடங்கும் என்று மட்டும் தெரியவில்லை. இதுதவிர்த்து முத்தையா இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Vishal and Dhanshika have started the process invitations work for their wedding

திருமணம் அறிவித்த விஷால்: விஷாலுக்கு 47 வயது ஆகிறது. இருப்பினும் அவருக்கு திருமணம் நடக்காமல் இருந்தது. இடையில் ஒரு பெண்ணுடன் நடந்த நிச்சயதார்த்தம் திருமணம்வரை செல்லவில்லை. இந்தச் சூழலில் சமீபத்தில் யோகிடா படத்தின் விழாவி கலந்துகொண்ட அவர்; தானும் தன்ஷிகாவும் காதலிப்பதாகவும்; இரண்டு பேரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம் என்றும் அறிவித்தார்.

பணிகள் தொடக்கம்: சாய் தன்ஷிகா - விஷால் காதல் விவகாரம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலிஅயில் திருமணத்துக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பதன் காரணமாக திருமண பணிகள் மும்முரமடைந்துள்ளன. அந்த வகையில் தங்களது திரையுலக நண்பர்களுக்கு பத்திரிகை வைக்கும் பணிகளை அந்த ஜோடி தொடங்கியிருக்கிறது. அதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன. மேலும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விஷால் நடிகரும் தனது நண்பருமான மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்துடன் இருக்கும் வீடியோவும் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X