வடிவேலு - கோவை சரளா மாதிரி சண்டை போட மாட்டோம்.. விஷால் - சாய் தன்ஷிகா வயது வித்தியாசம் தெரியுமா?
சென்னை: நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், லட்சுமி மேனன் கடைசியாக நடிகை அபிநயா வரை ஏகப்பட்ட நடிகைகளுடன் விஷால் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், கடைசியாக விஷால் காதலிக்கும் அந்த நபரை இன்று அதிகாரப்பூர்வமாக மேடையில் அறிவித்து தனது திருமண தேதியையும் சொல்லிவிட்டார். விஷாலை போலவே நடிகை சாய் தன்ஷிகாவும் தங்கள் திருமண தேதியை ரசிகர்கள் மற்றும் மீடியாவுக்கு முன்பாக வெளிப்படையாக அறிவித்து விட்டனர்.
47 வயதாகும் நடிகர் விஷால் வரும் ஆகஸ்ட் 29ம் தேதியுடன் 48 வயதை நிறைவு செய்கிறார். அதே நாளில் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக இன்று நடைபெற்ற யோகி டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனைவர் முன்பாகவும் அறிவித்துள்ளார்.

நடிகர் விஷாலுக்கு உடல் நலக்குறைவு என்றும் சமீபத்தில் நடைபெற்ற கூவாகம் திருவிழாவில் அவர் மயங்கி விழுந்தது என பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து நடிகர் விஷால் தனது உடலுக்கு ஒன்றுமில்லை என்றும் தான் ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் அறிவித்து வருகிறார். இந்நிலையில், அவர் திடீரென நடிகை சாய் தன்ஷிகாவை காதலித்து வருவதையும் விரைவில் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போகும் அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஷால் பிறந்தநாள்: 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகர் விஷால். ஜி.கே. ரெட்டி மற்றும் ஜானகி ரெட்டி தம்பதியினருக்கு மகனாக பிறந்த விஷாலுக்கு விக்ரம் கிருஷ்ணா எனும் சகோதரர் உள்ளார். திமிரு, சுழல் வெப்சீரிஸ் உள்ளிட்ட பலவற்றில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ரேயா ரெட்டி விஷாலின் சகோதரரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஆண்டு நடிகர் விஷாலின் பிறந்தநாள் அவருக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடல்நலக்குறைவு: இந்த ஆண்டு விஷால் நடித்த மத கஜ ராஜா படம் வெளியானது. சுந்தர். சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம், சோனு சூட், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட அந்த படம் பல வருடங்கள் கழித்து வெளியான நிலையிலும், பொங்கல் வின்னராக மாறி 50 கோடி வரை வசூல் ஈட்டியது. அந்த படத்தின் புரமோஷனுக்கு வரும் போது விஷாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரிய வந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கூவாகம் திருவிழாவில் விஷால் உடல்நிலை சரியில்லாமல் மயக்கம் போட்டு விழுந்தார். ஆனால், தனக்கு ஒன்றுமில்லை என்றும் நலமுடன் இருப்பதாக தொடர்ந்து கூறி வரும் விஷால் தற்போது திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
13 வயது வித்தியாசம்: நடிகர் விஷாலுக்கு 48 வயது ஆகவுள்ள நிலையில், நடிகை சாய் தன்ஷிகாவுக்கு வெறும் 35 வயது தான் ஆகிறது. இருவருக்கும் இடையே சுமார் 13 வருடங்கள் வித்தியாசம் உள்ளன. பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த விஷால் கடைசியாக நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுவெறும் படத்திற்கான புரமோஷன் இல்லை என்றும் உண்மையாகவே இருவரும் காதலித்து வருவதாகவும் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.
மனம் திறந்த சாய் தன்ஷிகா: 1989ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி தஞ்சாவூரில் பிறந்த நடிகை சாய் தன்ஷிகா 2006ம் ஆண்டு வெளியான மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் அறிமுகமானார். பேராண்மை, மாஞ்சா வேலு, அரவாண், பரதேசி, கபாலி, இருட்டு, லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஐந்தாம் வேதம் வெப்சீரிஸிலும் நடித்திருந்தார். அவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள யோகி டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் விஷாலை காதலித்து வருவதாகவும் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் அறிவித்தார்.
ஒரே நாளில் 3 ஸ்பெஷல்: நடிகர் சங்க கட்டடத்தை அதே நாளில் திறந்து வைக்க முடிவு செய்திருக்கிறார் விஷால். மேலும், அன்றைய தினம் அவரது பிறந்தநாள், இந்நிலையில் 3வதாக சாய் தன்ஷிகாவையும் விஷால் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார். விஷால் - சாய் தன்ஷிகா இருவரும் இதுவரை ஒருமுறை கூட இணைந்து நடிக்காத சூழலில் இருவருக்கும் இடையே எப்படி காதல் மலர்ந்தது என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். பல வருடங்களாக இருவரும் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறியதாக தெரிவித்துள்ளனர்.
நின்று போன நிச்சயம்: நடிகர் விஷாலுக்கு ஏற்கனவே ஒருமுறை திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமணம் நின்று போனது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அனிஷா ரெட்டியுடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணத்திற்கு முன்னதாகவே இருவரும் பிரிந்துவிட்டனர்.
வடிவேலு - கோவை சரளா போல இல்லாமல்: நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டுள்ளொம். வடிவேலு - கோவை சரளா போல சண்டை போடாமல் வாழ்வோம். அவங்க கிக் எல்லாம் தலைக்கு மேல வருது, நானும் மாஸ்டர் கிட்ட சண்டை கத்துக்கணும் போல என கலகலப்பாக பேசிய விஷால், எப்போதும் நான் கொஞ்சம் அமைதியா சூதானமாக இருந்துக் கொண்டால் எந்த பிரச்னையும் எங்களுக்குள் வராது என்று பேசினார்.
கட்டிப்பிடித்து முத்தம்: இருவரும் மேடையில் கட்டிப்பிடித்துக் கொண்டு முத்தம் கொடுத்துக் கொண்ட காட்சிகளும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. நடிகர் விஷால் ஒருவழியாக நடிகர் சங்க கட்டடத்தையும் தனது திருமணத்தையும் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி அனைத்து நடிகர்கள் முன்னிலையில் நடத்தப் போவதை அறிந்த பலரும் நட்சத்திர தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அட்ஜெஸ்ட்மெண்ட் முக்கியம்: நடிகர் ரவி மோகன் விவகாரத்து பஞ்சாயத்து ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அதையெல்லாம் நன்கு புரிந்து வைத்துக் கொண்ட நடிகர் விஷால், சாய் தன்ஷிகாவுடன் சண்டையே வந்தாலும் தடுக்க மட்டுமே கற்றுக்கொள்வேன் என்றும் நானே அடங்கிப் போய்விட்டால் எந்தவொரு பஞ்சாயத்தும் வராது என்றும் பேசியுள்ளார்.
கடைசியில் பெஸ்ட்: கடவுள் எப்போதுமே லாஸ்ட் ஆப்ஷன் பெஸ்ட்டாகத்தான் வைத்திருப்பார். எனக்கும் அப்படித்தான் தன்ஷிகா கிடைத்தார் என ஏகப்பட்ட முறை தனக்கு நடந்த பிரேக்கப்புகள் மற்றும் நிச்சயதார்த்தம் நடந்தும் திருமணம் நடக்காமல் போனது எல்லாமே நன்மைக்குத்தான் என விஷால் பேசிய விதத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் விஷாலுக்கும் திருமணமாகி விட்டால் அடுத்து இருக்கும் மோஸ்ட் வான்டட் பேச்சுலர் சிம்பு தான் என்றும் அவருக்கும் சீக்கிரமே திருமணம் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











