Mark Antony: லேடீஸ் விஷயத்துல டிசிப்ளினான கேங்ஸ்டர்... மார்க் ஆண்டனி படத்தின் விவகாரமான டிரைலர்!
சென்னை: விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி படத்தின் விவகாரமான டிரைலர் நேற்று வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில், ரிது வர்மா, அபினயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
பான் இந்திய திரைப்படமாக உருவாக உள்ள இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

மார்க் ஆண்டனி: சயின்ஸ் பிக்ஷன், டைம் டிராவல் கதை அம்சத்தைக் கொண்ட இப்படத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவருமே இரண்டு வேடத்தில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் ஐ லவ் யூ டி பாடலில் இடம் பெற்ற வரிகள் சர்ச்சையை கிளப்பின.
Mark antony மாமு: இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் விவகாரமான டிரைலர் நேற்று வெளியானது. இந்த டிரைலரின் ஆரம்பத்தில் நடிகர் கார்த்தியின் பின்னணி குரலில், Welcome to the world of Mark antony மாமு என்று கூற டிரைலர் தொடங்குகிறது. அதில் பெண்களுடன் குஜாலாக இருக்கும் விஷால், நல்லதுல என்னடா கெட்டது, கெட்டதுல என்னடா நல்லது என் கூறிவிட்டு ஆண்டனி கெட்டது என வில்லனாக மாஸ் வசனம் பேசி உள்ளார்.
பொம்பள சோக்கு கேக்குதா: 70ஸ் கெட்டப்பில் வரும் எஸ்ஜே சூர்யா பொம்பள சோக்கு கேக்குதா பொம்பள சோக்கு, லேடீஸ் விஷயத்துல டிசிப்ளினான கேங்ஸ்டர்ல நான் என்று அடுத்து மிரட்ட, இது என்ன பிரமாதம் அடுத்து ஒரு பெஷல் ஆட்டம் இருக்கும் என்பது போல மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா இருப்பது போல டிரைலரில் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.
இதைப் பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் டிரைலரை கொண்டாடி வருகின்றனர். முழுக்க முழுக்க காமெடி கலந்து வெளியாகி உள்ளதால் இந்த படம் விஷாலுக்கு கம்பேக் கொடுக்கும் என்ற நம்பிக்கை டிரைலரை பார்த்து வந்துள்ளதாக சில ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











