Mark Antony Box Office: அதிருதா.. உள்ள அதிரணும் மாமே.. மார்க் ஆண்டனி 4 நாள் வசூல் இத்தனை கோடியா?

சென்னை: வருது.. வருது.. அட விலகு விலகு.. வேங்கை வெளியே வருது என்றும் அதிருதா.. உள்ள அதிரணும் மாமே என தியேட்டர்களையே தெறிக்கவிட்டு வருகிறது விஷால், எஸ்.ஜே. சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விநாயாகர் சதுர்த்தி விடுமுறையுடன் அதிகபட்ச வசூல் வேட்டையை ஆடியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vishal and SJ Suryahs Mark Antony Day 4 Box Office reports are here

முதல் நாளே தமிழ்நாட்டில் 8 கோடி ரூபாய் வசூலையும் உலகளவில் 12 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டிய மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் முதல் ஏகப்பட்ட விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கிய நிலையில், ரசிகர்களும் படம் பட்டைய கிளப்புது என word of mouth வெளியிட 4 நாட்களும் தியேட்டர்களில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசையில் காது கிழிய ரசிகர்கள் விசில் சத்தம் விண்ணை பிளக்க மார்க் ஆண்டனி திரைப்படம் மாஸ் காட்டி வருகிறது.

போட்டி போட்டு: விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவருமே இந்த படத்தில் போட்டிப் போட்டு நடித்துள்ளனர். செல்வராகவன் கண்டுபிடிக்கும் டைம் டிராவல் டெலிபோனை பற்றி முதல் ஷாட்டில் இருந்தே சொல்லி படத்துக்குள்ளும் கார்த்தியின் குரலில் மார்க் ஆண்டனியின் உலகத்தையும் நமக்கு புரிய வைத்து விட்டார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

மேலும், கடைசி வரை நடிப்பு அரக்கனுக்கு டஃப் கொடுக்க கடும் உழைப்பை புரட்சி தளபதி விஷால் போட்டிருப்பதும் அதற்கான ஸ்கோப்பை இயக்குநர் கொடுத்திருப்பதும் தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.

விஷாலுக்கு முதல் 100 கோடி: விஷால் நடித்த திரைப்படங்கள் இதுவரை 100 கோடி வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் எல்லாம் விஷாலுக்கு பின்னர் வந்து அசால்ட்டா பல செஞ்சுரி அடித்த நிலையில், மார்க் ஆண்டனி விஷாலையும் 100 கோடி கிளப் ஹீரோவாக மாற்றும் என எதிர்பார்க்கின்றனர்.

4 நாள் வசூல் எவ்வளவு?: ஞாயிற்றுக்கிழமை வந்ததை போலவே விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளான திங்கட்கிழமையும் மக்கள் மார்க் ஆண்டனி திரையிட்ட தியேட்டர்களுக்கு படையெடுத்த நிலையில், 4 நாட்களில் 50 கோடி வசூல் வேட்டையை விஷால் படம் நடத்தியுள்ளது என்கின்றனர். 55 கோடி ரூபாய் வசூல் இதுவரை வந்துள்ளதாகவும் 2வது வார முடிவில் கண்டிப்பாக 100 கோடி வசூலை இந்த படம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X