தெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள்...பிகினி தமன்னா... டீசரிலேயே விஷால் விருந்து

சென்னை: விஷால் தமன்னா இருவரும் கமாண்டோ வீரர்களாக நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படத்தின் டீஸர் நேற்று வெளியானது. இத்திரைப்படத்தில் இதற்கு முன்பு எந்த திரைப்படத்திலும் இல்லாத அளவில் தொடக்கம் முதல் இறுதி வரையில் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பியுள்ளது. விஷால் ரசிகர்களுக்கு ஆக்ஷன் ஒரு விசுவல் விருந்தாகவே அமையப்போகிறது.

சுந்தர்.சி திரைப்படம் என்றாலே அந்தப் படத்தில் காமெடிக்கு 200 சதவிகிதம் கேரண்டி உண்டு. அடி வயிறு குலுங்க சிரித்து சிரித்து புண்ணாகும் அளவுக்கு அவர் படங்களில் காமெடி களைகட்டும் என்பது உறுதி. இது அவர் இயக்கிய முதல் படமான முறை மாமன் முதல் கடந்த ஆண்டு வெளியான கலகலப்பு 2 வரை தொடர்ந்து வந்தது. ஆனால் அவருக்கே காமெடி படமாக எடுத்து போரடித்து விட்டது போலும்.

Vishal and Tamannaah starring Action Movie Teaser Released

அதனால் காமெடிக்கு சற்று ஓய்வு இப்பொழுது கொஞ்சம் மாறுதலுக்காக முழுக்க முழுக்க ஆக்ஷன் படத்தை தயாரிக்க முடிவெடுத்தார். அதன் விளைவாக தற்போது அவர் இயக்கி வரும் ஆக்ஷன் திரைப்படமும், தெறிக்க விடும் ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை திணறடிக்கும் வகையில் தயாராகி வருகிறது.

இத்திரைப்படத்தில் விஷாலும் தமன்னாவும் கமாண்டோ வீரர்களாக நடித்து மிரட்டியுள்ளனர். தமன்னாவும் இதற்காகவே ஸ்பெஷலாக கமாண்டோ பயிற்சியும் எடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

இந்நிலையில், ஆக்ஷன் திரைப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை பல ஆக்ஷன் காட்சிகள் நிரம்பியுள்ளது.

இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு படத்திலும் இல்லாத அளவிற்கு இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. சில ஷாட்களில் ஆக்ஷன் சேஸிங் காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஷாட்டில் "ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ்" ஹாலிவுட் திரைப்படத்தை நினைவுபடுத்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

வி.எஃப்.எக்ஸ் எஃபெக்ட் பயன்படுத்தி இருப்பதால் சண்டை காட்சிகள் தூள் பறக்கின்றன. இருப்பினும் சில காட்சிகளில் அதன் தரம் எதிர்பார்த்த மாதிரி அமையாதது சற்று வருத்தமளிப்பதாக உள்ளது. விஷால் மற்றும் தமன்னா இருவரின் என்ட்ரி காட்சிகளும் கூட ஆக்ஷனோடு தான் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா ஷெட்டி போன்ற தென்னிந்திய நடிகைகள் போல தமன்னாவும் பிகினி காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் பாடல்கள் தூள் கிளப்பும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர் படக்குழுவினர். ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாகவே அமையப்போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X