twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உதயநிதியின் ஆசையும்.. விஷாலின் ஆசையும் ஒண்ணா இருக்கே.. அப்போ அது கன்ஃபார்மா நடக்கும்!

    |

    சென்னை: நடிகர் விஷாலின் லத்தி டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று வித்தியாசமாக நடைபெற்றது.

    அழைப்பிதழையே காக்கி சட்டை போல வடிவமைத்து நேம் பேட்ஜ் ஒட்டி சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கி இருந்தார் விஷால். மேலும், சைக்கிளில் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அவரது வீடியோ டிரெண்டாகி வருகிறது.

    உதயநிதி ஸ்டாலின், எஸ்.ஜே. சூர்யா, சூரி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    Laththi Teaser: ஒரே ஆளாக ஒட்டுமொத்த ரவுடி கேங்கையும் காலி பண்ணப் போறாரா விஷால்.. முடியல பாஸ்! Laththi Teaser: ஒரே ஆளாக ஒட்டுமொத்த ரவுடி கேங்கையும் காலி பண்ணப் போறாரா விஷால்.. முடியல பாஸ்!

    லத்தி டீசர் லாஞ்ச்

    லத்தி டீசர் லாஞ்ச்

    நந்தா மற்றும் ரமணா இணைந்து தயாரிக்க இயக்குநர் ஏ. வினோத் இயக்கத்தில் விஷால், சுனைனா நடிப்பில் உருவாகி உள்ள லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் மிரட்டலான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு காக்கி சட்டை அணிந்து கெத்தாக என்ட்ரி கொடுத்தார் விஷால்.

    பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி

    பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி

    லத்தி படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு உதவித் தொகையை காசோலையாக வழங்கினார் நடிகர் விஷால். அவருடன் அவரது நண்பர்களும் தயாரிப்பாளர்களுமான நந்தா மற்றும் ரமணா மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

    உதயநிதி ஆசை

    உதயநிதி ஆசை

    லத்தி டீசர் வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர்களின் ஒட்டுமொத்த ஏவிக்களையும் ஒளிபரப்பி அதன் பின்னர் டீசர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் விஷாலின் கடுமையான உழைப்பை பாராட்டி பேசியிருந்தார். மேலும், நடிகர் சங்கம் கட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் பெயர் இடம் பெற வேண்டும் என்பது தான் தனது ஆசை எனக் கூறினார்.

    விஷாலின் ஆசையும் அதுவே

    விஷாலின் ஆசையும் அதுவே

    அதே போல நடிகர் விஷால் பேசும் போதும், நடிகர் சங்க கட்டடத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரும் இடம்பெற வேண்டும் என்று ஆசை, அந்த கனவு விரைவில் நடக்க போகிறது என்று விஷால் பேசியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மேலும், லத்தி படத்திற்காக தனது ரத்தம், வியர்வையை சிந்து உழைத்தது குறித்தும் ஆக்‌ஷன் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

    English summary
    Vishal and Udhayanidhi Stalin wishes to add Karunanidhi and MK Stalin names in Nadigar sangam building at Laththi Teaser Launch event.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X