For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஷால் கல்யாணம் நடக்குமா நடக்காதா - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

|
Nadigar Sangam Election: விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் தனிப்பட்ட பிரச்சனை- வீடியோ

சென்னை: நடிகை அனிஷா அல்லா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தன்னுடைய நிச்சயதார்த்த ஃபோட்டோக்களை நீக்கியதால், விஷால்-அனிஷா திருமணம் நடக்குமா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகனும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் மிகவும் பிரபலமானவர் முன்னணி நடிகர் விஷால். பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ் படங்கள் மூலமே மிகவும் பிரபலமானவர்.

Vishal-Anisha Whether marriage will happen or not

செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்னர் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இவருக்கும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமாருக்கும் இடையில் காதல் என்றும் அவர்கள் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல வதந்திகள் பரவி கொண்டிருந்தது.

ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் போது நடந்த பிரச்சனையின் மூலம் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்றும் அதற்கு பின்னர் அங்கு நடைபெறும் முதல் திருமணமாக என் திருமணம் இருக்கும் என்று தெரிவித்திருந்தார் நடிகர் விஷால்.

Vishal-Anisha Whether marriage will happen or not

இந்நிலையில் நடிகர் விஷால் தெலுங்கு படங்களில் துணை நடிகையாக நடிக்கும் அனிஷா அல்லாவை (Anisha Alla) திருமணம் செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார். விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தில் அனிஷா அல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் பிரபலமானவர்.

அதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் விஷாலுக்கும் ஆந்திர தொழிலதிபரின் மகள் அனிஷா அல்லாவுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவர்களது நிச்சயதார்த்தம் விமரிசையாக ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு திரையுலகத்தினர் யாரையும் அழைக்கவில்லை.

ஒரு பக்கம் காதல் வழுக்குது.. ஒரு பக்கம் பாசம் வழுக்குது.. இதுக்கா வந்தீங்க? சாட்டையை சுழற்றும் கமல்!

இரு குடும்பத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களின் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு நடைபெறும் என்று நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது விஷால்-அனிஷா திருமணம் நின்றுவிட்டதாக வதந்திகள் பரவி வருகிறது. மணப்பெண்ணான அனிஷா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பல புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். நிச்சயதார்த்த புகைப்படங்களும் இதில் அடங்கும்.

ஆனால் தற்போது விஷாலுடன் இணைந்து எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இந்த காரணத்தால் விஷாலின் ரசிகர்கள் மத்தியில் இந்த திருமணம் குறித்து திடீர் குழப்பமும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி விஷால் தரப்பில் இருந்தோ அல்லது இரு வீட்டாரிடம் இருந்தோ அதிகார பூர்வமாக எந்த ஒரு தகவலும் இது வரை வெளியாகவில்லை. விஷால் தனது படங்களின் படப்பிடிப்பில் படு பிஸியாக நடித்து வருகிறார். விஷால் - அனிஷா திருமணம் நடைபெறுமா இல்லையா, ஏன் அனிஷா இன்ஸ்டாகிராமில் இருந்து புகைப்படங்களை நீக்கினார், என விஷால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கான பதில் வரும் வரை பொறுமையுடன் காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

English summary
Wondering whether Vishal-Anisha will get married, actress Anisha Alla has deleted her engagement photos from her Instagram page.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more