»   »  வெற்றி வெற்றி வெற்றி.... துப்பறிவாளன் பார்ட் 2-வுக்கு ரெடி - விஷால் அறிவிப்பு

வெற்றி வெற்றி வெற்றி.... துப்பறிவாளன் பார்ட் 2-வுக்கு ரெடி - விஷால் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை - மிஷ்கின் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியான துப்பறிவாளன் படத்தின் நான்கு காட்சிகள்தான் முடிந்திருக்கும். அதற்குள் மலேசியாவுக்குப் போன ஹீரோ விஷால், படம் பெரிய வெற்றி அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

துப்பறிவாளன் படத்துக்கு கலவையான விமர்சனங்கள்தான் வந்து கொண்டுள்ளன.

Vishal announces sequel for Thupparivaalaan

இந்த நிலையில் மலேசியாவில் செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் , படம் பெரிய வெற்றியை அடைந்துவிட்டது என அறிவித்துள்ளார்.

அத்துடன் இந்தப் படத்துக்கு தொடர்ச்சியாக அடுத்த பாகத்தை உருவாக்குவது நிச்சயம் என்றும் அறிவித்துள்ளார்.

துப்பறிவாளன் படத்துக்கு இந்த வெற்றி கிடைக்கும் என எதிர்ப்பார்த்தோம். அப்படி ஒரு பெரிய உழைப்பு. இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தோம். விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும், என்று கூறியுள்ளார்.

தனது அடுத்த படமும் விஷாலுக்குத்தான் என மிஷ்கின் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

English summary
Vishal announces sequel to Thupparivaalaan movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil