»   »  பார்ரா.. "ஆன்த்தம்" வெளியிடும் விஷால்.. ஒரு வேளை அரசியலுக்கு வந்துருவாரோ??

பார்ரா.. "ஆன்த்தம்" வெளியிடும் விஷால்.. ஒரு வேளை அரசியலுக்கு வந்துருவாரோ??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் விஷாலின் 40-வது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. 'செல்லமே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான விஷால் இதுவரை 30 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.

விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'Vishal Anthem' எனும் பெயரில் 'தலைவன் வருகின்றான்...' பாடல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை நடிகரும் விஷாலின் நண்பருமான ஆர்யா வெளியிட்டார்.

Vishal anthem is the preview of Vishal's entry into politics?

'கொலையுதிர்காலம்' ஆவணப்படத்தை இயக்கிய ராஜீவ்காந்தி இந்தப் பாடலை இயக்கியிருக்கிறார். இந்தப் பாடலை எழுதியவர் முருகன் மந்திரம். இஷான் தேவ் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். நிக்கில் மேத்யூ, இஷான் தேவ் இருவரும் பாடலைப் பாடி இருக்கிறார்கள்.

நடிகர் சங்கத்தின் செயலாளராக இருக்கும் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். சினிமாவின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விஷால் திருட்டு வி.சி.டி, பைரசிக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

சமூகப் பணிகள், சினிமா கலைஞர்களுக்கு உதவி செய்வது ஆகிய காட்சிகள் படமாக்கப்பட்டு இந்த விஷால் கீதம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலின் வரிகள், விஷாலின் அரசியல் பிரவேசத்திற்கான முன்னோட்டமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Read more about: vishal movie விஷால்
English summary
'Thalaivan Varugindraan...' - Vishal Anthem is the preview of Vishal's entry into politics? This song is directed by Ka.Rajiv gandhi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X