உன் மாமியார் செம சூப்பர்.. விஷால், சந்தானம், ஆர்யா அலப்பறைக்கு ரெடியா?.. மத கஜ ராஜா டிரெய்லர்!

சென்னை: சுந்தர். சி இயக்கத்தில் 11 வருடத்துக்கு முன்பாக வெளியான மத கஜ ராஜா சுருக்கமாக MGR என டைட்டில் வைத்து அப்போது வெளியான டிரெய்லரை தற்போது தூசி தட்டி நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்ய காரணமே அந்த படம் இந்த பொங்கல் ரிலீஸாக வரப்போவது தான். நடிகர் சந்தானம் ட்வீட் போட்டு பல யுகங்களாக கிடப்பில் கிடக்கும் மத கஜ ராஜா படம் ஒருவழியாக இந்த பொங்கலுக்கு வரப்போகிறது என அறிவித்ததும் விஷால் ஆர்மியினர் ஹேப்பியாகி விட்டனர்.

வில்லு படத்தில் விஜய் மற்றும் நயன்தாராவை வைத்து பிரபுதேவா பண்ண கிணத்து காமெடியை கொஞ்சம் உல்டா செய்து சுந்தர். சி கிணற்றில் இருந்து விஷால், வரலட்சுமி சரத்குமார் மற்றும் அஞ்சலி தொப்பென நனைந்தபடி ஒன்றாக வர அவர்களை கயிறு கட்டி இழுக்கும் வேலையை சந்தானத்துக்கு கொடுத்து சரவெடி காமெடியை உருவாக்கியுள்ள காட்சிகளில் தொடங்கும் டிரெய்லர் கடைசி வரை காமெடி அலப்பறையாகவே உள்ளது என ரசிகர்கள் மீம் மெட்டீரியலாகவே மத கஜ ராஜா படத்தின் டிரெய்லரை மாற்றிவிட்டனர்.

madha gaja raja vishal varalaxmi sarathkumar

5 ஆண்டுகள் கழித்து ஒரு படம் வெளியானாலே அயலான் படம் போல அடிவாங்கும் நிலையில், விஷால் படம் என்ன ஆகப் போகிறதோ என்கிற கேள்விகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பழைய சந்தானத்தின் காமெடிக் காட்சிகள் நிறைந்த படத்தை பொங்கலுக்கு பார்த்து வைப் பண்ணலாம் என ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர்.

மத கஜ ராஜா டிரெய்லர் திடீர் டிரெண்டிங்: இந்த பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி வரவில்லை என்கிற அறிவிப்பு வெளியானதும் தமிழ் சினிமாவே சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது. அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்கிற பழமொழி போல அத்தனை சின்ன படங்களும் வரிசைக் கட்டி இந்த பொங்கலுக்கு வெளியாகின்றன. இந்நிலையில், டிரெய்லர் வெளியாகி 11 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாத மதகஜ ராஜா திரைப்படமும் வரும் ஜனவரி 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பழைய டிரெய்லரை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வரலட்சுமியும் விஷாலும்: நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் விஷால் இணைந்து ஜோடியாக நடித்த இந்த படம் யார் கண்ணு பட்டதோ என்னவோ தெரியவில்லை. பல வருடங்களாக வெளியாகவில்லை. இன்னமும் விஷால் கல்யாணம் ஆகாமல் சிங்கிளாக இருக்க வரலட்சுமி சரத்குமார் கடந்த ஆண்டு தான் திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், விஷால் இடுப்பில் வரலட்சுமி சரத்குமார் ஏறி உட்காரும் காட்சிகள் அடங்கிய டிரெய்லரை ரசிகர்கள் சீன் சீனாக கட் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.மேலும், மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா என பலர் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், வில்லனாக சோனு சூட்டும் ஆக்‌ஷன் காட்சிகளில் அட்டகாசம் செய்ய காத்திருக்கிறார்.

சந்தானம் சரவெடி காமெடி: 12 வருஷத்துக்கு முன்னாடி சந்தானம் காமெடியனாக இருந்த போது உருவான இந்த படத்தில் சந்தானம், விஷால், ஆர்யா அலப்பறை செய்யும் கிளைமேக்ஸ் காட்சிகளுடன் டிரெய்லர் இடம்பெற்று ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது. என் பொண்டாட்டி சுமாராத்தான் இருப்பா என சந்தானம் சொல்ல, உன் பொண்டாட்டியை பத்தி யாரு பேசுனா, உன் மாமியார் சூப்பரோ சூப்பர் என ஆர்யா பேசும் அந்த காலத்து காமெடி எல்லாம் நிறைந்த படமாக மத கஜ ராஜா வெளியாக காத்திருக்கிறது. கண்டிப்பாக கடந்த ஆண்டு வெளியான ரத்னம் படத்தை விட இந்த படம் நல்லா இருக்கும் என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X